முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், கல்வி பிரதி அமைச்சருமான ஏ.எம்.எம். முஜீப் “தேச அபிமாணி” கௌரவ பட்டம் பெற்றார்.
கல்முனையை சேர்ந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை கமு/சிங்கள மத்திய மகா வித்தியாலயத்தியலும், உயர்தர கல்வியை அம்பாறை டி.எஸ். சேனநாயக்க தேசிய கல்லூரியிலும் கற்றுக்கொண்டார். தனது உயர்தரக் கல்வியை ஹாடி உயர் தொழிநுட்பவியல் கல்லூரியில் HND IN MANAGEMENT (SLIATE) பூர்த்தி செய்தார்.
மேலும் தனது பட்டப்படிப்பு கற்கையான Bachelor of Business Administration (BBA) UCEM பல்கலைக்கழகத்திலும் பூர்த்தி செய்தார்.
இவர் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (NILET) பயிற்றப்பட்ட சிங்கள மொழிவாளர்கள் மேலும் பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தனியார்துறை ஊழியர்களுக்கு சிங்கள மொழியை கற்பிக்கும் பிரபல்யம் வாய்ந்த சிங்கள மொழிமூல ஆசிரியராவார்.
மேலும் தரம் 10, தரம் 11 மாணவர்களுக்கான சிங்கள மொழிமூலமான செயன்முறை கட்டுரை நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இவர் 2013.05.04 ஆம் திகதி நடைபெற்ற கல்முனை பிரதேச செயலக பிரிவிற்கான இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்று இளைஞர் நாடாளுமன்றத்தில் நிழல் கல்வி பிரதி அமைச்சராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
மேலும் கல்முனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவராக தொழிற்பட்டார்.
கல்முனை 7 கிராம சேவகர் பிரிவின் கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினராகவும் கல்முனை சிவில் பாதுகாப்பு உறுப்பினராகவும் செயற்படுகிறார். கல்முனை 08 கிராம சேவகர் பிரிவின் ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டார்.
இவர் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மையத்தில் 2019. 09.14 நடைபெற்ற தேசிய சமாதான நீதவான்கள் மாநாடு 2019 யில்“தேச அபிமாணி” கௌரவ பட்டம் பெற்றமை சுட்டிக் காட்டத்தக்கது.