பட்டப்படிப்புக்கான பாடநெறிகளை தெரிவு செய்யும் போது, சந்தையில் எந்த துறையில் அதிக கேள்வி காணப்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அந்தத் துறையில் தேர்ச்சி பெற்றால் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வது அவ்வளவு கடினமான விடயமல்ல, என மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுசமயவர்தன மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த பரிசளிப்பு விழா நேற்று (19) புதிய நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது ஆண்டில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கும், சிறப்பாகச் சேவையாற்றிய ஆசிரியர்களுக்கும் ஆளுநர் அவர்களினால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன.
அங்குத் தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர்:பட்டதாரிகள் தங்கள் நியமனங்களைப் பெற்றுக்கொள்ள அரசியல் உதவிகள் தேவை என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். அந்த நிலைப்பாட்டை நாம் இம்முறை மாற்றியமைத்துள்ளோம். இம்முறை நியமனங்கள் வழங்கும் போது, எந்தவொரு வேண்டுகோள்களுக்கும், அழுத்தங்களுக்கும் அடிபணிந்து நாம் நியமனங்களை வழங்கவில்லை. வெளிப்படைத்தன்மையாகப் பரீட்சை வைத்து, முடிவுகளை இணையத்தளங்களில் வெளியிட்டு, தகுதியானவர்களைத் தெரிவு செய்தோம். அந்த நம்பிக்கையை நாம் ஏற்படுத்தியுள்ளோம்.
அதேவேளை மாணவர்களும், தாம் மத்திய அரசுக்கு உரித்தான பாடசாலைகளில் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். அங்குதான் எல்லா வசதிகளும் காணப்படுகிறது என்று எண்ணுகின்றனர். இந்த எண்ணத்தையும் நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். எமது மாகாணத்திற்கு உரித்தான பாடசாலைகள் 1200 காணப்படுகின்றனர். மத்திய அரசுக்கு உரித்தாக 362 பாடசாலைகளே உள்ளன. ஆகவே எங்களுக்குத் தான் அதிக மாணவர்களும், அதிக ஆசிரியர்களும் காணப்படுகின்றனர் எனவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
English:
Susamayawardhana Maha Vidyalaya Annual Prize Giving Ceremony - Speech - 19-09-2019
Graduate teachers were appointed in the western province according to their merits without any political influences, said Western Province Governor A.J.M.Muzammil in Colombo on Thursday.
The governor was speaking at the Annual Prize-Giving of the Susamayawardhana Vidyalaya held at the New Town Hall on Thursday.
Muzammil, who was the Chief Guest at the event, distributed the awards to the students in the presence of parents, well-wishers, teachers and students of the school. School Principal W. A.K. Weerasooriya delivered the welcome address at the ceremony.
Addressing a packed audience of students, parents and teachers of the school, Muzammil pointed out that during the selection of graduate teachers to the schools in the western province, the teachers were appointed only on their own competitive skills based on the standard of education to offer the best education to the students in the province.
He pointed out that there are 1,200 schools against 362 national schools in the province. “ We have the highest number of students and teachers in our western province , therefore, we have a greater responsibility,” he added. He lamented that the number of commerce graduate applicants exceeded the teachers’ requirements in the western province schools.
The governor urged the students to gear their education according to the market needs of the country so that they can be absorbed into various cadres where employment opportunities are available. Stressing the importance of vocational education in schools, the governor said the students should be guided to select suitable courses of studies not only according to their aptitudes but also according to the market needs of the society.
Muzammil also told the students to give priority to their respective religious and cultural values during their school career.
He told the students that as much as the students give priority to education, they should also give preference to their respective religious education. “ Education is more useful to the society provided there are religious values,” the governor said, pointing out that most of the schools are built near worshipping places so that religion and education go parallel with each other in life.