இரு மாணவிகளின் உயிர்களை காவுகொண்ட பாலத்திற்கு பதிலாக புதிய பாலம்


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-

ரு மாணவிகளை காவுகொண்ட பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் ஒன்றினை பொதுமக்கள் மற்றும் அக்கரபத்தனை பொலிஸார் இணைந்து பாதுகாப்பு வேலியுடன் அமைத்து கொடுத்துள்ளனர் அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலுப்புவத்தை தோட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ஜூலை மாதம் 18 திகதி வெள்ளப்பெருக்கினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 வயதுடைய இரண்டு மாணவிகள் நீரில் அடித்துச்செல்லப்பட்டு பரிதாபமான முறையில் உயிர் இழந்தனர்.

இந்த சம்பவத்தனை தொடர்;ந்த அந்த பகுதியில் வாழும் பொது மக்கள் மத்தியில் அச்சநிலை தோன்றின.
இம்மாணவர்கள் இறந்ததற்கு காரணம் பாலத்தில் இரு பக்கங்களிலும்.பாதுகாப்பு கம்பிகள். இல்லாமையே.
இத்தோட்டத்திலிருந்து. 20 இற்கு மேற்பட்ட மாணவர்கள் இப்பாதையின் ஊடாக டொரிங்டன் தமிழ் வித்தியாலயத்திற்கு கல்வி கற்க சென்று வருகின்றனர்.

விபத்து ஏற்பட்டவுடன் மலையக அரசியல் வாதிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து உடனடியாக பாலத்தினை கட்ட போவதாக மக்கள் மத்தியில் ஆளுக்கு ஆள் முண்டியடித்துக்கொண்டு வாக்குறுதிகள் வழங்கிய போதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில்.
மழைக்காலங்களில் மாணவர்கள் பாதுகாப்புடன் செல்வதற்காக அக்கரப்பத்தனை 475 ஜே எல்பத்த கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் நடராஜா நவராஜாவின் ஏற்பாட்டில்.

மாற்றுப்பாதை அமைப்பதற்கு அயோனா தோட்டத்தில் பழைய தொழிற்சாலை ஊடாக ஆகரல்பத்த தோட்டத்திற்கு செல்லும் வழியில் 100 வருடத்திற்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த பாலத்தினை இரண்டு லட்சம் ரூபா செலவில் பிரதேசத்தில் உள்ள நலன் விரும்பிகளின் பூரண பங்களிப்புடன் புணரமைப்பு செய்யப்பட்டது.
இவ்வாறு புனரமைக்கப்பட்ட பாலத்தினை 14.09.2019 அன்று பாடசாலை மாணவர்களின் பயன்பாட்டுக்காக இப்பாலம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி ஆனந்த சிறி. கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர்.ஆர் குழந்தைவேல் நுவரெலியா பிரதேச செயலகத்தின் கிராம அபிவிருத்தி சங்கத்தின் பொருப்பதிகாரி என். முரளி பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -