மர்ஹூம் ஏ.எச்.எம்.அஸ்வரின் இரண்டாவது ஞாபகார்த்த நிகழ்வு...

ஏ.எஸ்.எம்.ஜாவித்-

ர்ஹூம் ஏ.எச்.எம்.அஸ்வரின் இரண்டாவது ஞாபகார்த்த நிகழ்வு தெமட்டகொடை வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் முஸ்லிம் மீடியாபோரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் இன்று மாலை (30) நடைபெற்றது.

இந்த ஞாபகார்த்த நிகழ்வை மர்ஹ_ம் ஏ.எச்.எம்.அஸ்வர் ஞாபகார்த்த குழு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி, இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் சுஹைர் மொஹம்மட் ஹம்துல்லா, கலாநிதி எம்.ஹரிஸ்தீன், இலங்கைக்கான ஈரான் இஸ்லாமி குடியரசின் தூதுவர் மொஹமட் ஷெரி அமிரானி உள்ளிட்ட பல பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

மெலளவி எம்.ஐ.அப்துல் ஜப்பார் கிராஅத் ஓதியும், துஆப்பபிரார்த்தனை செய்தும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். வரவேற்புரையை சட்டத்தரணி ரஷீட் எம்.இம்தியாஸ் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து மர்ஹ_ம் ஏ.எச்.எம்.அஸ்வரின் சேவை நலன்கள் பற்றியும், அவர் முஸ்லிம் சமுகத்திற்கு ஆற்றிய பங்களிப்புக்கள் பற்றியும் கலாநிதி எம் ஹரிஸ்தீன், முஸ்லிம் மீடியாபோரத்தின் தலைவர் என்.எம்.அமீன் மற்றும் இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் சுஹைர் மொஹம்மட் ஹம்துல்லா ஆகியோர் உரையாற்றினார். 

பல்லின சமூகத்தில் முஸ்லிம்களுடைய சமகால பிரச்சினை குறித்து பேராதனை பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் ஞாபகார்த்த உரை நிகழ்த்தினார் இறுதியாக பிரதம அதிதி ரவூப் ஹக்கீம் அஸ்வர் பற்றியும், அவரின் திறமைகள், துணிச்சல்கள் மற்றும் அவரின் குணாதியஙங்கள் பற்றி சிறப்பாக உரையாற்றினார்.

இதன்போது மர்ஹ_ம் அஸ்வரின் ஞாபகார்த்தமாக வறிய குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 50 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை பாடப்புத்தகங்கள் அடங்கிய கற்றல் உபகரணப் பொதிகள் வழங்கப்பட்டன.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -