சாதாரண மக்களின் வாழ்விடங்களிலும் வாழ்வாதாரத்திலும் விளையாடிய கடலரிப்பு அப்பிராந்தியத்தின் உயர் நிறுவனமான தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தையும் விட்டுவிடவில்லை.
பல்கலைக்கழக நிருவாகம் தனது அதிகார பிரதேசத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக பல்வேறுபட்ட உத்தியோகபூர்வ செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றபோதிலும் இதுவரை காத்திரமான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்டவர்கள் எடுத்ததாக தெரியவில்லை.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான பத்து ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு காவுகொள்ளப்பட்டுள்ள நிலையில் கடலின் சீற்றம் இன்னும் நிலங்களையும் ஏன் கட்டிடங்களையும் காவுகொள்ளகூடிய அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அபாயத்தை கட்டுப்படுத்துவது யார்? இப்பிரதேச நிலம் அணுவணுவாய் கடலால் அபகரிக்கப்படுகிறதே! சமூக ஆர்வலர்களே! அரசியல்வாதிகளே! விரைந்து வாருங்கள் ஏற்பட்டுள்ள அபாயத்தை தடுக்க காத்திரமான நடவடிக்கைகளை எடுங்கள்.