உலக கவிஞர் மாநாட்டில் உயர்விருது பெறும் கவிஞர் பொத்துவில் அஸ்மின்.


ம்போடியா அங்கோர் தமிழ் சங்கமும் கம்போடியா அரசின் கலை, கலாசார அமைச்சும் இணைந்து நடாத்தும் உலக தமிழ் கவிஞர்கள் மாநாடு இம்மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் கம்போடியா சியம்ரீப் மாநிலத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை, இந்தியா மலேசியா, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா உள்பட 40 நாடுகளில் இருந்து 500 தமிழ் கவிஞர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாட்டுக்கு சிறப்பு விருந்தினர்களாக கம்போடியா நாட்டின் துணை பிரதமர், சியம்ரீப் மாநில கவர்னர் மற்றும் பாடலாசிரியர்களான பா.விஜய்,விவேகா,ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இம்மாநாட்டில் கம்போடியா கலாசார அமைச்சினால் இலக்கியத்துக்கான உயர் விருது வழங்கப்பட்டு கவிஞரும் தமிழ் திரைப்பட பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் கெளரவிக்கப்படவுள்ளார்.
இரண்டு தசாப்த காலத்துக்கும் மேலாக கலை ,இலக்கிய, ஊடகத்துறையில் தடம்பதித்துவரும் பொத்துவில் அஸ்மின்
இலங்கை அரசினால் அண்மையில் இலக்கிய துறைக்கான 'கலைச்சுடர்' விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -