அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்ற ஆதரவளிக்கபோவதில்லை அமைச்சர் திகா


நோட்டன் பிரிஜ் எம்.கிருஸ்ணா-

திகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்ற நாங்கள் எதிர்ப்பதுடன்
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெரும் வேற்பாளரை நிறுத்த வேண்டும் என பிரதமர் அவர்களிடம் நானும் எமது மக்களும் வேண்டுகோள்விடுக்கின்றோம் இந்த பயணத்தில் பிரதமரும் இருக்கவேண்டுமென மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமாகிய பழநி திகாம்பரம் தெரிவித்தார்

அட்டன் டி.கே.டபில்யூ கலாசார மண்டபத்தில் 20/09 அன்று 483 பயனாளிகளுக்கு காணி உறுதி பத்திரம் வழங்கி வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்

இந் நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியில் தலைவரும் விசேட அபிவிருத்தி அமைச்சருமாகிய வே.இராதாகிருஸ்ணன், முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான எம்.உதயகுமார் எம் ராம் சோ.ஸ்ரீதரன் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் அ.லோரன்ஸ் பிரதேசசபை உறுப்பினர்கள் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித்தலைவர் பா.சிவனேசன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர ஜி.நகுலேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்

இதன் போது தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் இந்த கலாசார மண்டபத்தில் கடந்த காலத்தில் இருந்த தலைவர்கள் பஜனையும் கோழி குஞ்சுகளையுமே கொடுத்தார்கள் ஆனால் தமிழ் முற்போக்கு கூட்டணியாக நானும் மனோவும் ராதாவும் ஒற்றுமையாக நான்கு வருடங்கள் பயணித்தமையினாலே இன்று காணி உறுதிப்பத்திரதை வழங்குகின்றோம் காணி உறுதிபத்திரம் வழங்கினால் தோட்டத்திலுள்ளவர்கள் விற்றுவிடுவார்கள் அடகு வைத்துவிடுவார்கர்கள் அதனால் தான் நாங்கள் அதனை பெற்றுக்கொடுக்கவில்லை என கடந்த கால தலைர்கள் கூறுகின்றார்கள் ஆனால் அப்படி அல்ல இப்போது ஒவ்வெறு வீட்டிற்கும் படித்தவர்கள் சிந்திக்ககூடியவர்கள் உறுவாகி விட்டார்கள் தொழிலாளியாக இந்த மண்டபத்திற்கு வந்த நீங்கள் ஒவ்வெறுவரும் காணி உறுதிபத்திரத்துடன் லட்சாதிபதியாக வீடு செல்லபோகின்றீர்கள்.

உரிமை அரசியல் என்பது இது தான் காணி உரிமையுடன் தனி வீடு, பிரதேசசபை அதிகரிப்பு பிரதேசசபை சட்டத்திருத்தம் அதிகாரசபை உறுவாக்கம் என்பன பெற்றுக்கொண்டுளோம்

நானும் அமைச்சர் ராதாவும் அமைச்சர் மனோவும் தனித்தனியாக இருந்போது எதையும் சாதிக்க முடிவில்லை ஆனால் நாங்கள் மூவரும் ஒற்றுமையாக இருக்கும் இந்த நான்கு வருடத்தில் பல விடயங்களில் வெற்றிகண்டுள்ளோம் இதை அடிமட்டத்தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும் மேலும்
மேலும் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெரும் வேற்பாளரை களம் இறக்க வேண்டுமென பிரதரிடம் கேட்டுகொள்ளும் அதே வேலை மலையக அபிவிருத்திக்கு பிரதமரின் பங்களிப்பு அளப்பரியது.

 ஆகவே பிரதமரும் கைகேர்த்து தேர்தலில் இணைந்து பயணிக்க வேண்டும் எனவும் மக்களும் நானும் இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன் அத்தோடு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இப்போது நீக்க வேண்டுமென கூறுவதை நாங்கள் ஏற்ற போவதில்லை இதற்கு தாமரை மொட்டிலுள்ளவர்களும் ஏன் ஐக்கிய தேசிய கட்சியிலுள்ளவர்களுமே விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -