தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளராக அஷ்ஷெய்க். எம்.ஐ.அமீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை நிருவாக சேவை தரம்-1 சிரேஷ்ட அதிகாரியான இவர், தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, விளையாட்டு அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றி வந்த நிலையில் மேற்படி அமைச்சின் செயலாளராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.
இதற்கு முன்னர் முஸ்லிம் சமய, கலாசார திணைக்கள பணிப்பாளராகவும் புத்த சாசன, மத விவகார அமைச்சின் உதவிச் செயலாளராகவும் புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளராகவும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும் பதவி வகித்துள்ளார்.
சம்மாந்துறையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது நிர்வாக சேவையின் ஆரம்ப காலத்தில் சம்மாந்துறை பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.