ஆயினும் தங்களது சில நிலைப்பாடுகள் தொடர்பாக நான் மாற்றுக் கருத்தைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.
1. மக்கள் உங்களிடம் சில கோரிக்கைகளை முன்வைக்கும் போது அவற்றின் முக்கியத்துவத்தையும் உண்மைத் தன்மையையும் அறிந்து ஏற்றுக் கொண்டால், இயன்றவரை அதனைச் சாதிக்க முயலவேண்டுமேயொழிய திணைக்களச் சுற்றறிக்கைகள் மற்றும் சட்டதிட்டங்கள் உங்களுக்குத் தடையாக இருக்கக் கூடாது. அவை நிர்வாக அதிகாரிகளுக்கே ஒரு தடை. நா.உ.அத்தடைகளையும் தாண்டி செயலாற்ற வேண்டும். மேலும் அதிகாரிகளின் பரிந்துரைகள்/வேண்டுகோள்கள் எவ்விதத்திலும் எந்ததொரு சமூகத்ததினது நியாயமான வேண்டு கோளை/எதிர்பார்ப்பை நிராகரிக்க நீங்கள் இடம் கொடுக்கக் கூடாது.
2.1950ன் ஆரம்பத்தில் கௌரவ SWRD பண்டாரநாயக சுகாதார அமைச்சராக இருந்தபோது கல்முனை பா.உ. கேட் முதலியார் M.S.காரியப்பர் சாய்ந்தமருதுக்கு ஒரு மத்திய மருந்தகம் அமைக்க வேண்டியபோது அதனை அமைச்சின் செயலாளர் கல்முனை வைத்தியசாலையின் தூரத்தை சுட்டிக்காட்டி நிராகரித்தார். இதனை MSK ஏற்றுக் கொள்ளாது மறு நாள் நாடாளுமன்றத்தில் அமைச்சரை விமர்சித்து காரசாரமாகப் பேசினார். மக்களுக்காகவே சட்டம் ஒழிய சட்டத்திற்காக மக்கள் அல்ல என விவாதித்தார். மறுநாள் அமைச்சர் MSKயின் கோரிக்கையை ஏற்று அனுமதி வழங்கினார்.
2. 1980களில் கலவரச் சூழலில் சாய்ந்தமருது மருத்துவமனை மிகப் பிரயோசனமாக விளங்கியது. பல ஊர்களில் இருந்தும் இங்கு பிரசவத்திற்கு வந்தார்கள். அதனால் இப்பிராந்தியத்தில் இங்கேயே அதி கூடிய மகப்பேறு நடைபெற்றது. இதனைக் கண்ணுற்று 1986/87 இல் கல்முனைக்குடியிலும் ஒரு M.H. தேவை என அமைச்சர் A.R. மன்சூர் அவர்களிடம் அவ்வூர் மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆயினும் அதிகாரிகள் அதனை இரு பக்க துரத்தை சுட்டிக்காட்டி நிராகரித்தனர்.
அவ்வேளை கல்முனைக்குடி மருந்தகப் பொறுப்பதிகாரியாக இருந்த என்னை அமைச்சர் அழைத்து இதன் சாதக பாதகங்களை வினவினார். நான் அதற்கு சாதகமாக பதிலளித்து இம்முயற்சி எதிர்காலத்தில் இங்கு அம்பாரை மாவட்டத்தின் கரையோரத்தின் பிரதம வைத்திய சாலை உருவாக உதவும் எனக் கூறினேன். உடனே அவர் செயலில் இறங்கினார். ஆரம்ப நடவடிக்கைகளுக்கு நானே பொறுப்பாகவிருந்து பின்னர் நானே அவ்வைத்திய சாலையின் முதலாவது பொறுப்பதிகாரியாகவும் செயற்பட்டேன்.
3. சுனாமியினால் சீரழிந்த/பொலிவிழந்த சாய்ந்தமருது வைத்திய சாலையை மீண்டும் கட்டியெழுப்ப பலமுயற்சிகள் செய்தும் வெற்றி பெறாத சந்தர்ப்பத்தில் தாங்கள் இவ்வைத்திய சாலையை இப்பிரதேசத்திற்கான விபத்து/முறிவு வைத்திய சாலையாக அபிவிருத்தி செய்ய எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது. ஆனால் அதன் பின்னணியில் நடந்த விடயங்கள் "பிச்சை வேண்டாம் நாயைப் பிடி" என்று கூறுமளவுக்கு வந்தது. இதனை ஏற்றுக் கொண்டிருந்தால் சாய்ந்தமருது வைத்திய சாலை எனும் பெயர் மாறி கல்முனைAMHஇன் உப பிரிவாக செயற்பட்டிருக்கும். அவ்விதம் உப பிரிவாகச் செயற்படும் போது இதனை எவ்விதம் பிரயோசனப்படுத்துவது என்பது MS/ AMH இன் தீர்மானத்திலேயே நடைபெறும்.
இதே வேளை சுனாமியினால் பாதிக்கப்பட்ட வைத்திய சாலை வளவினை எவ்விதம் பிரயோசனப்படுத்துவது என்பதிலும் புதிதாக வைத்திய சாலை கட்டுவதில் ஏற்பட்ட சிக்கலிலும் தீர்மானம் எடுப்பவர்கள் நடந்து கொண்ட முறைகளும் எதிர் காலத்தில் சாய்ந்தமருதுக்குத் தனியான உள்ளூராட்சி சபை பெறுவதற்கு நடைபெறும் முயற்சிகளுக்கு குந்தகம் விளைவிக்காமையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.
4. எதிர்காலத்தில் மாவட்டத்தில் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக நீங்கள் பல திட்டங்களை முன்வைத்துள்ளீர்கள். அதற்கு எமது வாழ்த்துக்கள் ஆயினும் அவை தற்கால உட்கட்டமைப்புக்குள் மட்டும் அடங்குவதாக இல்லாமல் தூர நோக்கோடு திட்டமிடப்பட வேண்டும்.
உ+ம்:
i. எதிர்காலத்தில் பெரும்பாலான மருத்துவ பரிசோதனைகள்/சிகிச்சைகள் வீட்டில் இருந்தவாறு பெற்றுக்கொள்ளும் வசதிகள் மூலம் போக்குவரத்து, காலம்,இடவசதிகள் ஆகியவற்றில் நெருக்கடியைக் குறைக்கலாம்.
ìi. ஒவ்வொரு கி.சே. பிரிவுக்கும் ஒரு E.T.U.அமைப்பதன் மூலம் வைத்திய சாலைகளில் நெருக்கடியை குறைக்கலாம்.
iii. அம்புலன்ஸ் சேவை ஒவ்வொரு பிரதேச வைத்தியசாலையிலும் கிடைக்க வேண்டும்.
iv: ஏலவே பிரேரிக்கப்பட்டது போன்று மாவட்டத்திற்குத் தேவையான விசேட சிகிச்சைப் பிரிவுகள் பல் வேறு வைத்தியசாலைகளில் ஸ்தாபித்தல்.
V. எல்லா மட்டங்களிலும் நவீன தொழில் நுட்பங்களை பாவித்தல்.
நன்றி
Dr.M.I.M.Jameel
President
Council of Senior Citizens
Sainthamaruthu