எச்.எம்.எம்.பர்ஸான்-
ஓட்டமாவடி - மீராவோடை கிராமிய வைத்தியசாலையில் கடமையாற்றிச் சென்ற வைத்தியர்கள், தாதியர்கள் ஊழியர்கள் ஆகியோர்களின் சேவைகளைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று வைத்தியசாலையில் இடம்பெற்றது.
வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டொக்டர் எச்.எம்.எம்.முஸ்தபா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலையில் சேவையாற்றியோர்களுக்கு நினைவுப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதில் டொக்டர் எச்.எம்.எம்.முஸ்தபா உரையாற்றும் போது,
எமது வைத்தியசாலைக்கு ஊழியர்கள் தேவைப்படும் நிலையிலுள்ள போது இங்கு பணி புரிந்தவர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றமையானது வைத்தியசாலை நிருவாகத்திற்கு இன்னும் பாரிய சுமைகளை சந்திக்க நேரிட்டுள்ளது. அத்தோடு குறித்த வைத்தியசாலைக்கு வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற நாள் ஒன்றுக்கு நானூறுக்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகை தருகின்றனர் அதே போன்று 150 க்கும் மேற்பட்டோர் கிளினிக் மூலம் சிகிச்சை பெருகின்றனர். இவ்வாறான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள ஆளணி அவசியம் தேவைப்படுகின்றது என்றார்.