சவூதி அரசாங்கம் சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீட அபிவிருத்திக்காக 50 மில்லியன் அமெரிக்க டொடலர்களை வழங்குகின்றது. அதற்கான ஒப்பந்தம் இன்று(18. 09. 2019) நிதி அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.
இந் நிகழ்வில் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதித் தவிசாளரும் முகாமைத்துவ பணிப்பாளருமான னுச. காலித் சுலைமான் அல் ஹுதைரிஇ இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் அப்துல் நாஸர் அல் ஹார்திஇ நிதி அமைச்சின் செயலாளர் னுச. சமரதுங்கஇ பொறியலாளர் பெந்தர் மற்றும் ஏனைய உத்தியோகத்தரகளும் கலந்து கொண்டனர்.
திருகோணமலை பாராளுமணற உறுப்பிணர் எம். எஸ் தொளபீக் அத்துடன் கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக நிதி உதவி கோரி அதற்கான ஆவனங்களும் கையளிக்கப்பட்டது. கிண்ணியாஇ மூதூர்இ தோப்பூர்இ புல்மோட்டை போன்ற வைத்தியசாலைகள் அடங்களாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட வைத்தியசாலைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
சவுதி அரசாங்கம் ஏற்கணவே கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு காக்கை வலிப்பு வைத்தியசாலை மற்றும் நரம்பு தளர்ச்சி வைத்தியசாலை இரண்டு கட்டிடங்கள் அங்கு அமைந்துள்ள சகல பரீசோதனை இயந்திரங்கள் மாதாந்தம் 3500 நோயாளிகள் நாடு பூராவிலும் வருகை தந்து பரிசோதிக்கும் பெட ஸ்கனர் போன்ற மெசின்களையும் பரிட்சித்தனர். இவ் வைத்தியசாலைகளுக்கு பொறுப்பான வைத்திய அதிகாரிகள் சவுதி அரசாங்கம் இலங்கைக்கு இலகு கடன் திட்டத்தில் நிர்மாணித்த இந்த வைத்தியசாலைகள் மூலம் மிகவும் பிரயோசனப்படுவதாகவும் இங் கைங்கரியத்திற்கு இலங்கை மக்களும் அரசாங்கம்; நன்றி கூறப் கடமைபட்டுள்ளனர் என கருத்து தெரிவித்தனர்
திருகோணமலை முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பிணர் எம். எஸ் தொளபீக இவ் ஏற்பாட்டினை செய்திருந்தார். ஏற்கனவே பதுளை –செங்கல்லடி அதிவேக வீதி, சப்ரகமுவ பல்லைகக்கழகம கடடிடம், வைத்திய பீடம். யாழ் வைத்தியசாலை அபிவிருத்தித்த்திட்டம் கின்னியா நெடும் பாலம், களுகங்கை கின்னியா நீர்ப்பாசன திட்டம் தொழில்நுட்பக் கல்லூரி போன்ற திட்டங்களை ஏற்கனவே சவுதி அரசாங்கம் நிதியுதவி அளித்து வருகின்றமையும் குறிபபிடத்தக்கது.
அத்துடன் 30 வருடங்களுக்கு மேலாக 2 இலட்சம் இலங்கையர் சவுதியில் தொழில் பெற்று இலங்கைக்கு அந்நியச் செலாவனியை அனுப்புகினறமையும் குறிப்பிடத்தக்கது.