கலை இலக்கிய திறந்த மட்ட போட்டி ஒன்பதில் முதலாம் இடம் பெற்று கவிதாயினி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமாவரலாற்று சாதனை


ஹஸ்பர் ஏ ஹலீம்-
த்திய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் பிரதேச செயலக மட்டத்தில் நடாத்தப்பட்ட கலை இலக்கிய திறந்த மட்டப் போட்டி 2019 இல் மீரிகம செயலகப் பிரிவில் பஸ்யாலையைச் சேர்ந்த கவிதாயினி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் பங்குபற்றி ஒன்பது நிகழ்வுகளில் முதலாம் இடம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இலங்கை அதிபர் சேவை தரம் 02 இல் பதவி வகிக்கும் இவர் கல்லெலிய அலிகார் முஸ்லிம் மகா வித்தியாலய பிரதி அதிபராகக் கடமையில் உள்ளார். இள வயது முதல் எழுத்துத் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்த இவர் 2017 ஆம் ஆண்டு 'இரண்டும் ஒன்று" என்ற தனது முதலாவது கவிதை நூலை வெளியிட்டதன் மூலம் இலக்கிய உலகமெங்கும் பெயர் பதித்தது மட்டுமல்லாமல் 'புதையல் தேடி" என்ற கவிதை நூலை மிக விரைவில் வெளியிடவுமுள்ளார்.
சமூக அவலம், பெண்ணியம், சர்வதேசப் பார்வை என்பன இவரது கவிதைகளில் காணக்கூடியதாக இருப்பதோடு தனது எழுத்தாண்மையினால் குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் பேசக்கூடிய ஒருவராகவும் மாறியுள்ளார். அவர் பங்குபற்றி வெற்றிபெற்ற போட்டிகளின் விபரம் பின்வருமாறு. தமிழ் மொழி மூலம்:- கவிதை , பாடலாக்கம் ,நூல் விமர்சனம்
சிறுகதை ,சிறுவர் கதை,ஆங்கில மொழி மூலம்:-கவிதை, பாடலாக்கம், நூல் விமர்சனம், சிறுவர் கதை,
இம்முடிவுகள் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -