கோத்தாபய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா ?

அரசியல் ஆய்வாளர் நிலாம்டீன்-

கோத்தாபய ராஜபக்சவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பான பதிவுகள் எவையும் தம்மிடம் இல்லை என்று, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சும், குடிவரவு குடியகல்வு திணைக்களமும் தெரிவித்துள்ளது.

அப்படியானால் இவர் எப்படி இரட்டை குடியுரிமை பெற்றார் ?

சட்ட பூர்வமாக தனது அமெரிக்க குடியுரிமையை இன்னும் சட்ட பூர்வமாக இவர் இரத்து செய்தார் என்பதற்கான எந்தவொரு ஆதாரமும் இன்னும் இல்லை.

ஆக இன்னும் அண்ணாச்சி மேடின் அமெரிக்கன். இந்த கோணத்தில்தான் அண்ணாச்சியின் வேட்பு மனு இரத்து செய்ய மிக அதிக வாய்ப்புள்ளதாக நாம் ஏற்கனவே எழுதி இருந்தோம் .

இந்த துரும்பு சீட்டைத்தான் ரணில் வைத்துக் கொண்டு தான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம் என்று அடம் பிடித்து வந்தார் ,

ஆனால் இந்த கிங் மேக்கர் மங்கள இரண்டு நாடுகளிடம் போட்டுக் கொடுத்து ரணிலுக்கு ஆப்பு வச்சிட்டார் ..

கோத்தாபய தேர்தல் களத்தில் இல்லை என்றால் அல்லது அவரது மனு நிராகரிப்பு அல்லது அதற்கு முன்னர் நீதி மன்ற தடை வருமானால சஜித்தின் வெற்றி நிச்சயம் என்பது உறுதி.

கோத்தாவின் உள்வீட்டு ரகசியங்களை மங்கள வுக்கு போட்டுக் கொடுத்தவர் யார் ?

இன்னும் நாட்கள் உள்ளது பார்ப்போம் ...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -