தேசிய கைவினைக் கவுன்சிலுடன் இணைந்து மேல் மாகாண கைத்தொழில் திணைக்களம் ஏற்பாடு செய்த 'பேலதிக விஸ்கம் 2019' மேல் மாகாண கைவினைக் கண்காட்சியும், போட்டி நிகழ்ச்சியும் கடந்த செப்டம்பர் 20ஆம் திகதி பொது நூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம், முஸம்மில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்குத் தொடர்ந்தும் உரையாற்றிய ஆளுநர்; அரசாங்கமும் குறித்த கலைஞர்கள் விடையத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளது. அவர்களுக்காகத் திணைக்களங்களையும் உருவாக்கியுள்ளது. சந்தை படுத்தக்கூடிய ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். அதேபோன்று அவர்களின் படைப்புகளுக்குத் தேவையான பொருட்களையும் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேல் மாகாண செயலாளர் பிரதீப் யசரத், தேசிய கைவினைக் கவுன்சிலின் தலைவர் ஹேஷானி போகொல்லாகம உட்படக் கலைஞர்கள் பொதுமக்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
குறித்த கண்காட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்களின் கைவினைப் பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் போட்டி நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களையும் ஆளுநர் ஏ.ஜே.எம், முஸம்மில் வழங்கிவைத்தார்.