நான் கல்வி ராஜங்க அமைச்சராக இருந்த காலத்தில் எந்ததெந்த பாடசாலைக்கு நிதி ஒதுக்குகிறேன் என்று எவரும் கேட்கவில்லை.
ஹட்டன் கல்வி வலயத்தில் ஹைலன்ஸ் டிக்கோயா.ஹொளி ரோசரி,புலூம்பீல்ட் உட்பட பல பாடசாலைகளுக்கு நிதி ஒதுக்கியிருக்கிறேன் ரணில் விக்கிரசிங்கவின் அரசாங்கத்தில் தான் ஏனைய அமைச்சுக்களைவிட அபரீதமான அளவு நிதியினை ஒதுக்கிய அரசாங்கம்.
இந்த மூன்றாண்டு காலப்பகுதியில் பாடசாலைகளுக்கு அடிபடை வசதிகளை பூர்த்தி செய்து கொடுத்துள்ளோம்,ஆசிரியர் நியமனங்களை பெற்றுக்கொடுத்துள்ளதுடன் வலயக் கல்விப்பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் ,உட்பட பல நியமனங்களையும்,ஸ்மாட் வகுப்பறைகள் என பல அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மலையகத்தில் மாத்திரம் கணிதம் விஞ்ஞானம் கற்கக்கூடிய 20 பாடசாலைகள் தரமுயத்தப்பட்டுள்ளன.
இது மலையகத்திற்கு மட்டு மன்று வடகிழக்கு மாகாணங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விசேட பிராந்திங்களுக்கான அபிவிருத்தி அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வி;.ராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸகெலியா ஆரம்பிரிவில் சுமார் 1.65 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட இரண்டு மாடிக்கட்ட பாடசாலை கட்டடம் நேற்று (23) திகதி அமைச்சர் வி.ராதாகிருஸணன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எழு வகுப்பறைகளையும் ஒரு கேட்போர் கூடத்தினையும் கொண்டு அமைக்கப்பட்ட மேற்படி கட்டடம் சகல வசதிகளையும் கொண்டுள்ளன.
இந்நிகழ்வின் போது அமைச்சர் ராதாகிருஸணன் அவர்களால் பல்லூடகக் கருவி ஒன்றும் பாடசாலை அதிபருக்கு கையளிக்கப்பட்டதுடன் மாணவர்களின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.
பாடசாலையின் அதிபர் திருமதி எஸ்வெலிங்டன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு ஹட்டன் கல்வி பணிமனையின் உதவிக்கல்விக் பணிப்பாளர்கள்,அதிபர்கள் முன்னாள் கல்விப்பணிப்பாளர்கள் உட்பட் அதிபர்கள் ஆசிரி;யர்கள் கலந்து கொண்டிருந்தனர்.