இன்று கல்முனை டிப்போவிற்கு முன்பாக உணவு சமைத்து பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இலங்கை போக்குவரத்து சபை கல்முனை ஊழியர்கள் சாலைக்கு முன்பாக செவ்வாய்க்கிழமை (17) 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற நிலையில் ஊடகங்களிற்கு இவ்வாறு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
ஊழியர்களின் 2500 அடிப்படை சம்பள அதிகரிப்பு பதவி உயர்வு தற்காலிக ஊழியர்கள் நிரந்தர நியமனம் என்பவற்றை கடந்த காலங்களாக வலியுறுத்தி வருகின்றோம்.எனினும் எதுவித நடவடிக்கையும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை எனவே இப்போராட்டத்தை தொடர்ந்த முன்னெடுக்கவுள்ளோம் என கறிப்பிட்டனர்.
அத்துடன் இ.போ.ச வின் தனித்துவத்தை சிதைக்காதே போக்குவரத்து அமைச்சு தனியாருக்காகவா என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி இந்த கவனயீர்ப்பு பணிபகீஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.மேலும் இப்போராட்டத்தினால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.