தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள களுவாஞ்சிகுடி திருமுருகன் ஆலய வீதி மக்கள் பயன்படுத்தக் கூடிய வகையில் செப்பனிடப்படுமா? அரசியல்வாதிளும் அதிகாரிகளும் கவனம் செலுத்துவார்களா??
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் தானே களுவாஞ்சிகுடியின் இந்த வட்டாரத்துக்கும் பொறுப்பானவர்.இவர் உட்பட அரசியல்வாதிகள் பலரிடம் கூறியும் அவர்கள் இந்த வீதியினைப் பற்றி கவனத்தில் எடுக்காமல் திரிகின்றார்கள்.இதற்கு ஆட்சியில் உள்ள தமிழ் தேசியகூட்டமைப்பு அரசியல்வாதிகளினாலோ அல்லது வேறு கட்சி அரசியல்வாதிகளினாலோ தீர்வினை பெற்றுத் தர முடியுமா???களுவாஞ்சிகுடி மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக மற்றும் பிரதேச சபையினுடைய எல்லைக்குட்பட்ட களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் இருந்து திருமுருகன் ஆலயம் மற்றும் கல்வி நிலையங்கள் மற்றும் மக்கள் குடியிருப்புக்களை நோக்கிச் செல்லும் மிக முக்கியமான பெருமளவான மக்களினுடைய பயன்பாட்டிலுள்ள களுவாஞ்சிகுடி திருமுருகன் ஆலய வீதியானது கடந்த பலவருட காலமாக சேதத்துக்குள்ளாகிய நிலையில் காணப்படுவதாகவும் இது வரை இவ் வீதியானது முற்று முழுதாக செப்பனிடப்படாமல் சேறும் சகதியுமாக காணப்படுவதாக இப் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள், வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள், அரச தொழில்களுக்கு செல்லும் உத்தியோகத்தர்கள் மழைகாலங்களில் இவ் வீதியினை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதாக பொது மக்கள் கவலையுடன் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த பல வருடங்களாகியும் இன்று வரை கவனிப்பாரற்ற நிலையிலேயே காணப்படும் இவ் வீதியினை மிக விரைவில் செப்பனிட்டு மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்து தருமாறு இப் பிரதேச அரசியல்வாதிகளிடமும் அரச அதிகாரிகளிடமும் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.