நல்லது என்றால் என்ன? கெட்டது என்றால் என்ன? விளக்குகிறார் இ.கி.மிசன் முன்னாள்தலைவர் சுவாமி சர்வருபானந்தாஜீ

காரைதீவு சகா-

ல்லது என்றால் என்ன? கெட்டது என்றால் என்ன? சொல் செயல் சிந்தனை ஆகிய மூன்றினாலும் யாருக்கும் தீங்கு துன்பம் விளைவிக்காவிடில் அது நல்லது. மாறாக ஊறு விளைவித்தால் அது கெட்டது.

இவ்வாறு உலகளாவிய இராமகிருஸ்ணமிசனின் இலங்கைக்கான முன்னாள் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சர்வருபானந்தா ஜீ மஹராஜ் விளக்கமளித்தார்.

இந்தியா காசியிலிருந்து வருகைதந்த சுவாமி சர்வருபானந்தா ஜீ மஹராஜ் நேற்று(17) காரைதீவுக்கு விஜயம்செய்தார்.அவருடன் இ.கி.மிசன் மூத்த சுவாமி அவ்வையானந்தா ஜீ மட்டு.இ.கி.மிசன் பொதுமேலாளர் சுவாமி தக்ஷயானந்தா ஜீ ஆகியோரும் விஜயம்செய்திருந்தனர்.

காரைதீவு இ.கி.மிசன் அபிமானிகள் காரைதீவு இ.கி.மிசன் சாராதா சிறுமியரில்லத்தில் ஒன்றுகூடலொன்றை ஏற்பாடுசெய்திருந்தார்கள்.
இ.கி.மிசன் அபிமானி சிவானந்தியன் வி.ரி.சகாதேவராஜா வரவேற்புரையுடன்கூடிய தலைமையுரையை நிகழ்த்தினார்.

தொடர்ந்து சுவாமி சர்வருபானந்தா அங்கு உரையாற்றுகையில்:
ஒருவனுடைய சொல் செயல் சிந்தனை ஆகிய மூன்றும் ஏனையோரை ஒருபோதும் வேதனைக்குள்ளாக்குதல்கூடாது.
கண்ணால் காண்பதும் பொய் காதால்கேட்பதும் பொய் தீரவிசாரித்தறிவதே மெய். அதுபோல ஒரு காட்சியை வைத்துக்கொண்டு இது நல்லது அது கெட்டது என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது. எதனையும் ஆழமாக தீர விசாரித்தறிந்து எமது 3செயல்களையும் செய்யவேண்டும்.

ஒருவனை மனதால்கூட நிந்திக்ககூடாது. அப்படியெனின் சமுதாயத்தில் அமைதி சமாதானம் நிலவும். அதேபோன்று எமது சந்தோசம் மற்றவரை வேதனைக்குட்படுத்துதல் கூடாது.
எவன் நல்லது நினைக்கின்றானோ அவனது மனம் அமைதிகாண்கிறது. மாறாக கெட்டது நினைப்பவன் துன்பப்படுவான். சிலருக்கு மது அருந்துவதனால் சந்தோசம் வரலாம்.ஆனால் அதனால் உடலுக்கு கேடு வருகிறதே. எனவே அதனை நல்லது என்று கூறலாமா? இல்லை. அந்தசசெயலால் கேடு விளைந்தால் அது நல்லதல்ல. என்றார்.

இறுதியில் சாரதா சிறுமியரில்ல மாணவிகளின் பஜனையும் தொடர்ந்து சுவாமி சர்வருபானந்தாஜீயின் தன்னலமற்ற ஜீவசேவையைப் பாராட்டி காரைதீவு இ.கி.மிசன் அபிமானிகள் வெ.ஜெயநாதன் தலைமையில் சுவாமிக்கு பொன்னாடைபோர்த்துக்கௌரவித்தார்கள்.
இ.கி.மிசன் அபிமானி கு.ஜெயராஜி நன்றியுரையாற்றினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -