இன்று செப்டம்பா் 21ஆம் திகதி உலக சமாதான தினமாகும். அதனை முன்னிட்டு அபிநாம் எனும் சமயங்களின் ஒன்றிணைவு இயக்கம் இன்று கொழும்பு இலங்கை மன்றக் கல்லுாாியில் விசேட செய்தியாளா் மாநாட்டினை நடாத்தியது. இம் மாநாட்டில் அருட் சகோதரா் தமயன் அரசகுலரத்தின, கரவிலகொட்டுவ தம்மாதிலக்க தேரோ , ஈஸ்வர குருக்கள், அஸ்சேக் எம்.பி.எம் பிர்தௌஸ் நளிமி ஆகியோா் இலங்கையின் சமயங்கள் ஒன்றினைந்து கருத்துக்களை தெரிவித்தனா்.
பன்மைத்துவ மற்றும் அப்பன்மைத்துவங்களுக்கு இடையிலுள்ள பரஸ்பர தங்குநிலையே பௌதீக மற்றும் உயிரியல் உலகின் அடிப்படையாகும். இயற்கையின் நியதிக்கு ஏற்ப அந்நியதிகளால் புரணமாக செழிப்புற்றிருக்கும் இலங்கை.
உலகிலுள்ள பிரதான நான்கு சமயங்களும் வேரூன்றி இருக்கும் இந் நாட்டில் வாழும் நாம் அச்சமயங்களை நடைமுறையில் பிரயோகிப்பதற்கு இருக்கும் பொறுப்பை கருத்திற்கொண்டே தீரவேண்டிய தருணத்தை அடைந்திருக்கிறோம். இன ரீதியான பன்மைத்துவத்தின் காரணமாக வன்முறை முரண்பாடுகளுக்குள் சிக்குண்டு தவித்த நாம் சமயத்தை அடிப்படையாகக்க கொண்ட முரண்பாடுகளுக்குள் 2019ஆ்ண்டளவில் நுழைந்திருக்கிறோம்.
சமய சமதான பணிகளை ஊக்குவிப்பதற்கு பதிலாக யுத்த முன்னெடுப்புக்களை ஊக்குவிக்கும் நிலைமைக்கு முழு உலகமு ம் உள்ளாகியிருக்கின்றது. இச் சமூக யாதாா்ததின் அடிப்படையில் மனிதபிமான சமய நிறுவுனா்களால் தோற்றுவிக்கப்பட்ட சமயங்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற பௌத்த , இந்து . இஸ்லாம், கிரிஸ்த்துவம் சமயத் தலைவா்களாகிய எமக்கு இனிமேலும் நாம் தினந்தோறும் மேற்கொள்ளும் சமய பணிகளை மாத்திரமே நிறைவேற்றிக் கொண்டிருக்க முடியாத நிலை உருவாகியிருக்கின்றது.
2008ஆண்டிலிருந்து இன்று வரை ஒன்றாக நீண்ட ஒரு செயன்முறையில் பயணித்து பன்மைத்துவத்தின் காரணமாக தோற்றம் பெறும் ”முரண்பாடுகளுடன் வன்முறை கையாளுகைகளை தவிா்த்து அவற்றை புதிய படைப்புகளுக்கும் புதி ய உறவுகளுக்கும் சமூக அரசியல் கலாச்சார பொருளாதார முன்னேற்றத்திற்கும் உந்து சக்தியாக உபயோகிக்கும் கலையை சமயத்தினுடாக மேற்கொண்டு நிருபித்த நாம் இப்போது ஒன்றினைவதற்கு தீா்மாணித்துள்ளோம்.. அவ்வாறு தீா்மாணித்த நாம் அபி நாம், ஆனோம். சயங்களுக்கிடையே கருத்தாடல்களை உருவாக்கி தமது சமய தா்மத்தின் அடிப்டை போதனைகளுக்கும் மற்றும் அவ்றறின் பிரயோகத்திற்கும் இடையில் உள்ள இடைவெளியை க் குறைத்து தோற்றம் பெற்றிருக்கும் சமய மற்றும் இனங்களுக்கிடையிலான இடைவெளியைக் குறைக்க ஒத்துழைப்பு வழங்கி இலங்கைச் சமுகத்தினை ஆற்றப்படுதத அனைவரையும் அழைக்கின்றனா் அபி நாம் உறுப்பினர்கள்.