மலையகத்தில் 16.09.2019 அன்று காலை முதல் தொடரும் மழை காரணமாக பொகவந்தலாவையிலிருந்து காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீரை கொண்டு செல்லும் கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக பொகவந்தலாவ கிலானி மற்றும் பொகவானை வழியாக பொகவந்தலாவ நகரத்திற்கு செல்லும் இரண்டு பிரதான வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.
பெய்த கடும் மழை காரணமாக கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக சுமார் மூன்று அடி உயரத்திற்கு நீர் மட்டம் அதிகரித்துள்ளமையால் குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்து மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
திரேசியா, கிலானி, சிங்காரவத்தை, பொகவானை, டன்பார் ஆகிய தோட்ட பகுதிகளில் இருந்து பொகவந்தலாவ சென். மேரீஸ் மத்திய கல்லூரி மற்றும் ஹோலிரோஸ்சரி ஆகிய பாடசாலைகளுக்கு வருகின்ற மாணவர்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளதாக மாணவர்கள் தெரித்தனர்.
இதேவேளை பொகவந்தலாவ டின்சின் பகுதியில் உள்ள மரக்கறி பயிர்செய்கையும் வெள்ளநீரில் பாதிக்கபட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.