வசதிகள் இன்றி சாதித்த மாணவர்கள்...

டந்தவாரம் சுகததாஸ மைதானத்தில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட தடகளப் போட்டியில் திருமலை மாவட்ட மெய்வன்மைச் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றிய 20 வயதுப் பிரிவில் எச்.எம். றிஹான் ஈட்டி எறிதல் போட்டியில் முதலாம் இடம் பெற்று தங்கப் பதக்கத்தையும் எம்.எஸ்.இப்ராஸ் குண்டு எறிதலில் மூன்றாம் இடம் பெற்று வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளார்கள். எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற மைதானத்தில், எறிதல் நிகழ்ச்சிக்கு உரிய சரியான நிறையினால் அமையாத உபகரணங்களை கொண்டும் தமது விடாமுயற்சியினால் பயிற்சியின்மூலம் தேசிய ரீதியிலான பதக்கங்களைப் பெற்றுள்ளார்கள்.

பிரதம பயிற்றுனரும் சர்வதேச மட்ட பதக்கங்களைப் பெற்றவருமான கே.எம்.ஹாரீஸ் மற்றும் இலங்கை மனித உரிமைகள் சமாதான தூதுவர் அமைப்பின் இலங்கை முழுவதற்குமான விளையாட்டு மற்றும் பயிற்றுவிப்பாளருக்கான இணைப்பாளர் தேசசக்தி குணாளன் இருவரினதும் அர்ப்பணிப்பு மிக்க முயற்சியினால் இந்த வெற்றி சாத்தியப்பட்டது. 

இவர்கள் இருவரும் திருமலை மாவட்ட சிரேஷ்ட விளையாட்டு அதிகாரி ச. விஜயநீதனின் மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெருவிளையாட்டுக்களிற்கு கோடிக் கணக்கணக்கான பணத்தைக் கொட்டும் அரசியல் சேவையாளர்கள். தடகளத்துறைக்கு10% வீத நிதியை ஆவது ஒதுக்க வேண்டும் என்பது விளையாட்டு ஆர்வலர்களின் எதிர் பார்ப்பாகும்.தகவல்: விளையாட்டு ஆர்வலர்கள் கிழக்கு மாகாணம். 

எச்.எம். றிஹான் ஈட்டி எறிதல்

எம்.எஸ்.இப்ராஸ் குண்டு எறிதல்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -