தேசிய, சர்வதேச கராத்தே போட்டிகளில் தொடர் வெற்றிகள் பெற்றுவரும் பால்ராஜ்

காரைதீவு குறூப் நிருபர் சகா-
லங்கையின் 45 ஆவது தேசிய விளையாட்டு விழாவினை முன்னிட்டுபொலன்னறுவையில் நடைபெற்ற போட்டிகளில்கடந்த 13-16.09.2019 வரை கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பங்குபற்றி இவ்வருடமும் தங்கப்பதக்கத்தினை பெற்றுக் கொண்டார் கராதத்தே சாதனையாளர் பால்ராஜ்.

கராத்தே கலையில் பல சாதனைகள் படைத்து தேசிய ரீதியிலும் சர்வதேச போட்டிகளிலும் பங்குபற்றி வெற்றிகளும் விருதுகள் பலவும் பெற்று கல்முனை பிரதேசத்திற்கும் மாவட்டத்திற்கும் மாகாணத்திற்கும் நாட்டிற்கும் பெருமை தேடித்தரும் சேனைக்குடியிருப்பைச் சேர்ந்தவரே கராத்தே வீரர் பால்ராஜ்.

கல்முனை மாநகரத்திற்குட்பட்ட சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த எஸ். பாலுராஜ் சிறு வயது முதல் கராத்தேயில் ஆர்வமான இவரே தேசிய சர்வதேச போட்டிகளில் விருதுகள் பெற்று பாராட்டுக்களையும் பெற்றுவருகின்றார்.

J.K.M.O மாணவர் பாலுராஜ்

மேலும் இவர் 2014 2016 2018 ஆம் ஆண்டுகளில் சாதனைகள் பல புரிந்துள்ளார்கள்.
இவரின் ஆசானாகிய சிகான் Eng .S முருகேந்திரன் இவருக்கான விருதுகள் தொடர்ச்சியாக 07 ஆண்டுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளமை சிறிப்பம்சமாகும். அத்தோடு இவ் வருடமும் 45வது தேசிய விளையாட்டிலும் கலந்து கொண்டு தனது விடாமுயற்சியினால் தனது தங்க பதக்கத்தை தக்கவைத்து 08 வருட காலமாக வெற்றி வாகை சூடியுள்ளார்.
கராத்தே வீரர்களான இந்த சகோதரர்கள் சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த சௌந்தரராசா அன்னம்மா தம்பதியினரின் புதல்வராவார்கள்.
அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் கராத்தே கலையினை பல மாணவர்களுக்கு பயிற்றுவித்துவரும் jKMO அமைப்பின் சிரேஷ்ட்ட போதனாசிரியர் SHIHAN எஸ் முருகேந்திரன்(Eng) மற்றும் மாவட்ட விளையாட்டு அதிகாரி நூர்டீன், நௌபீஸ் மாவட்ட விளையாட்டு அதிகாரிகளான ஈஸ்வரன் ,அமிரலி மற்றும் விளையாட்ட உத்தியோகத்தர்களான சுலக்ஷன் ஆகியோருக்கும் நலன்விரும்பிகளுக்கும் இவர்கள் நன்றியினையும் தெரிவித்தனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -