கிழக்கு மாகாண ரீதியாக நேற்று (22) கல்முனையில் இடம்பெற்ற தேசிய மீலாத் தின சிங்களப் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவி அபூபக்கர் பாத்திமா ஸைனப் கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்று தேசிய போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு மத்தியில் இடம்பெற்ற குறித்த போட்டியில் எமது பாடசாலையிலிருந்து இரு மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் சிறந்த முறையில் தன்னுடைய திறமையினை வெளிப்படுத்தி அபூபக்கர் பாத்திமா ஸைனப் சாதனை புரிந்து தேசிய ரீதியாக நடைபெறவுள்ள போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குறித்த போட்டியில் பங்குபற்றி பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துத் தந்த மாணவிக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு மாணவியை வழிநடாத்திய ஆசிரியர்களான எம்.எம்.எம்.அஸ்மின், திருமதி கௌசல்யா சிவகுமார் ஆகியோர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன் என்றார்