நாட்டின் விடுதலைக்காகப் போராடி உபாதைகளுக்குள்ளான இராணுவத்தின் ஓய்வூதிய (பென்ஷன்) கொடுப்பனவு அதிகரிப்புக்காக உபாதைக்குள்ளான இராணுவ வீரர்களால், கொழும்பு - கோட்டை புகையிரத நிலையம் முன்பாக முன்னெடுக்கும் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆதரித்து, முஸ்லிம் சமூகத்தின் சார்பில் ஆதரவு தெரிவிக்கும் வகையில் முஸ்லிம் தேசிய ஐக்கிய முன்னணியுடன் இணைந்து உலமாக் கட்சியும் (20) வெள்ளிக்கிழமை மாலை கலந்து கொண்டது. உபாதைகளுக்குள்ளான இராணுவ வீரர்களால் ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பிலான அறிக்கையும், இதன் போது மு. தே. ஐ. முன்னணியின் இணைத் தலைவர் ஹஸன் மௌலானா, உலமாக் கட்சித் தலைவரும் மு. தே. ஐ. முன்னணியின் இணைத் தலைவர்களில் ஒருவருமான மெளலவி முபாறக் அப்துல் மஜீத் ஆகியோரிடம் காண்பிக்கப்பட்டது. இதில் முஸ்லிம் புத்திஜீவிகள் உள்ளிட்ட மௌலவிமார்கள் பலரும் கலந்து கொண்டனர்.
உபாதைகளுக்குள்ளான இராணுவத்தினருடன் மு.தே.ஐ.மு.யும் உலமாக் கட்சியும்