ஊடகவியலாளர்களுக்கு நைற்றா நிறுவனத்தின் ஊடாக அரச அங்கீகாரம் பெற்ற தரச்சான்றிதழ் - சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ.மஜீத்


ஷய்பான் அப்துல்லாஹ்-
டகவியலாளர்கள் அனைவருக்கும் தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையினூடாக என்.வி.கியூ-4 என்ற அரச அங்கீகாரம் பெற்ற தரச்சான்றிதழை பெற்றுகொடுக்க தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் (நைற்றா) தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸிர் அஹமட் நடவடிக்கை எடுத்துள்ளதாக சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ.மஜீத் தெரிவித்தார்.

சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ.மஜீத் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவுக்கும் தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் (நைற்றா) மாவட்ட முகாமையாளர் மசூருக்குமிடையிலான சந்திப்பு இன்று (18) புதன்கிழமை கல்முனையிலுள்ள நைற்றா மாவட்டக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் சிலோன் மீடியா போரத்தின் பொருளாளர் யூ.எல்.நூருல் ஹூதா, உறுப்பினர் என்.எம்.அப்றாஸ், நைற்றா மாவட்டக் காரியாலய பயிற்சி உத்தியோகத்தர் எம்.ராச மோகன், உத்தியோகத்தர் எம்.சீ.எம்.பாஹிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஊடகவியலாளர்கள் இத்தரச்சான்றிதழினைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவங்களை மாவட்ட முகாமையாளர் எம்.மசூர் சிலோன் மீடியா போரத்தின் பிரதிநிதிகளிடம் கையளித்து வைத்தார்.

இவ்விடயம் சம்பந்தமாக சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ.மஜீத்; மேலும் தெரிவிக்கையில்,
நாட்டிலுள்ள ஊடகவியலாளர்கள் அனைவரும் என்.வி.கியூ-4 என்ற அரச அங்கிகாரம் பெற்ற தரச்சான்றிதழை பெற்றுகொள்ள தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் மாவட்ட காரியாலயத்தினால் தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

ஊடக நிறுவன மொன்றில் முழு நேர அல்லது பகுதி நேர ஊடகவியலாளர்களாக நான்கு ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ள அனைத்து ஊடகவியலாளர்களும் இந்த வாய்ப்பை பெற்றுக்கொள்ள தகுதியுடையவர்கள். சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இதற்கான தேர்வுகள் மாவட்ட ரீதியாக நடத்தப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பப்படிவங்களை பிராந்திய ஊடகவியலாளர்கள் தங்களது மாவட்ட றைற்றா காரியாலயத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் இவ்விண்ணப்பங்கள் இம்மாதம் 27.09.2019ம் திகதியுடன் முடிவடைகின்றன.

இச்சான்றிதழ்கள் 4 அல்லது 5 பிரிவுகளில் வழங்கப்படவுள்ளதுடன் இதற்கான தேர்வுகள் மற்றும் அமர்வுகளை ஆர்.பி.எல் மூலமாக நடாத்தி முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இச்சான்றிதழ் புதிய தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஊடகவியலாளர்களுக்கு பெரும் வாய்ப்பாக அமையும். அத்துடன் ஊடகவியலாளர்கள் இச்சந்தர்ப்பத்தை முறையாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஊடகத்துறை மூலமாக நாட்டுக்கு பணியாற்றிவரும் ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் முகமாக இச்சான்றிதழ் வழங்கும் திட்டத்தினை தனது சிந்தனையினூடாக அறிமுகப்படுத்திய தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் (நைற்றா) தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட்டுக்கு சிலோன் மீடியா போரம் ஊடகவியலாளர்கள் சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதற்காகவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -