03. தற்காலிக நாள் சம்பள அடிப்படையில் Casual daily ஒப்பந்தம் அல்லது நிவாரண அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குதல்
அரசாங்க நிர்வாக சுற்றுநிருபம் 25/2014 மற்றும் 25/2014 (1) வெளியிடப்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்ட தேவையை பூர்த்தி செய்யாததினால் சேவையின் ஸ்திரத்தன்மையைப் பெற்றுக் கொள்ளமுடியாத ஊழியர்களைப் போன்று சுற்றறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் சேவை தேவை அடிப்படையில் அரச நிறுவனங்களில் ஆரம்ப தரங்களுக்கு உட்பட்ட பதவிகளுக்கு தற்காலிகமாக நாள் சம்பளம் (Casual daily) ஒப்பந்தம் அல்லது நிவாரண அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்பட்டு 180 நாட்களுக்கும் மேல் சேவையாற்றியுள்ள ஊழியர்கள் தேவையான தகுதிகளை 2019.09.01 தினத்திற்கு பூர்த்தி செய்யும் அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டு 180 நாட்களுக்கு மேலாக சேவையாற்றியுள்ள ஊழியர்களுக்கு தேவையான தகுதி 2019.09.01 தினத்தன்று பூர்த்தி செய்யும் அடிப்படையில் அந்த பதவிகளில் நிரந்தர ஓய்வூதியத்துடன் நியமனம் வழங்குவதற்காக சுற்றறிக்கைக்கான ஒதுக்கீட்டு நடைமுறையை மேற்கொள்வதற்காக கௌரவ பிரதமர் அவர்களும் நிதி அமைச்சர் அவர்களும் அரச நிர்வாக இடர்முகாமைத்துவ மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் அவர்களும் கூட்டாக சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
17.09.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்
01. போஷாக்கிற்கான பல்துறை நடவடிக்கைகளுக்கான திட்டம் 2018-2025
2010ஆம் ஆண்டில் பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய போஷாக்கு கொள்கைக்கு அமைவாக போஷாக்கை மேம்படுத்தும் செயற்பாடுகளுக்காக சுகாதாரம் மற்றும் சுகாதார துறையற்ற துறை உட்பட அரசாங்கம் மற்றும் அரசாங்கமல்லாத தரப்பினரின் பங்களிப்பு மற்றும் தலையீட்டை பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்தல், அனைத்து வகையிலும் மந்தப் போஷாக்குத் தன்மையை முடிவுக்குக் கொண்டு வருதல் உள்ளிட்ட 2030ஆம் ஆண்டளவில் பேண்தகு அபிவிருத்தி இலக்கை எட்டுதல் மற்றும் 2025ஆம் ஆண்டளவில் 2012ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக சுகாதார மகாநாட்டில் உடன்பட்ட மந்த போஷாக்குத்தன்மையை தடுப்பதற்கான உலகளாவிய முயற்சியை வெற்றி பெறுவதற்கு பங்களிப்பு செய்தல் என்ற முக்கிய நோக்கத்தை நிறைவேற்றும் தேவையாகும். இதற்காக அனைத்து அமைச்சுக்கள், மாகாண சபைகள், மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாக அதிகாரிகள,; அபிவிருத்தி தரப்பினர,; நிதியுதவி வழங்கும் நிறுவனங்கள், புத்தஜீவிகள் வர்த்தக சமூகத்தினர், சிவில் அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் உள்ளிட்ட பல்லின தரப்பினரின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்ட 'போஷாக்கிற்கான பல துறைகளை ஒன்றிணைத்த திட்டம் 2018 - 2025 (2வது கட்டம்)' என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கொள்கை ரீதியில் உடன்பாட்டை எட்டுவதற்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. சர்வதேச தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை தினத்திற்கு அமைவாக 'தகவல் மாதம்' என்பதை பிரகடனப்படுத்துதல்
2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2016ஆம் ஆண்டு இலக்கம் 12 இன் கீழான தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமைக்கான சட்டம் தற்பொழுது உலகில் சிறந்த 4ஆவது சட்டமாக தரப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த தகவல்கள் சட்டம் நடைமுறைப்படுத்தும் அடிப்படை பொறுப்பை கொண்டுள்ள வெகுஜன ஊடக அமைச்சினால் இதை செயல்படுத்துவதற்கான தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைவாக 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி இடம்பெறும் தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை தொடர்பான சர்வதேச தினத்திற்கு அமைவாக 2019ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி தொடக்கம் 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை 'தகவல் மாதம்' என்று பிரகடனப்படுத்துவதற்கும் இந்த மாதத்திற்குள் இந்த சட்டத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களுக்கும் ஆலோசனை வழங்குவதற்காக சுற்று நிருபம் ஒன்றை வெளியிடுவதற்கும,; இதற்கு அமைவாக நாடு முழுவதிலும் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளும் உள்ளடங்கும் வகையில் சிவில் பிரஜைகளை தெளிவு படுத்தும் வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்வதற்கும் 'கமட்ட தொரதுரு ஐதிய' (கிராமத்திற்கு தகவல் உரிமை) என்ற தொனிப்பொருளில் RTI நடமாடும் சேவைகளை 5 மாவட்டங்களை தெரிவு செய்து நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. தற்காலிக நாள் சம்பள அடிப்படையில் Casual daily ஒப்பந்தம் அல்லது நிவாரண அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குதல்
அரசாங்க நிர்வாக சுற்றுநிருபம் 25/2014 மற்றும் 25/2014 (1) வெளியிடப்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்ட தேவையை பூர்த்தி செய்யாததினால் சேவையின் ஸ்திரத்தன்மையைப் பெற்றுக் கொள்ளமுடியாத ஊழியர்களைப் போன்று சுற்றறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் சேவை தேவை அடிப்படையில் அரச நிறுவனங்களில் ஆரம்ப தரங்களுக்கு உட்பட்ட பதவிகளுக்கு தற்காலிகமாக நாள் சம்பளம் (Casual daily) ஒப்பந்தம் அல்லது நிவாரண அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்பட்டு 180 நாட்களுக்கும் மேல் சேவையாற்றியுள்ள ஊழியர்கள் தேவையான தகுதிகளை 2019.09.01 தினத்திற்கு பூர்த்தி செய்யும் அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டு 180 நாட்களுக்கு மேலாக சேவையாற்றியுள்ள ஊழியர்களுக்கு தேவையான தகுதி 2019.09.01 தினத்தன்று பூர்த்தி செய்யும் அடிப்படையில் அந்த பதவிகளில் நிரந்தர ஓய்வூதியத்துடன் நியமனம் வழங்குவதற்காக சுற்றறிக்கைக்கான ஒதுக்கீட்டு நடைமுறையை மேற்கொள்வதற்காக கௌரவ பிரதமர் அவர்களும் நிதி அமைச்சர் அவர்களும் அரச நிர்வாக இடர்முகாமைத்துவ மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் அவர்களும் கூட்டாக சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04. இலங்கை மகாவலி அதிகார சபை சட்டத்தில் 13 (18) சரத்திற்கு அமைவாக கூட்டுத்தாபனமாக்கப்பட்டுள்ள இலங்கை மகாவலி அதிகார சபைக்கு உட்பட்ட நிறுவனமான வரையறுக்கப்பட்ட இயற்கை வள முகாமைத்துவ சேவை தனியார் நிறுவனம், வரையறுக்கப்பட்ட மகாவலி வென்வர் கெபிட்டல் தனியார் நிறுவனம், வரையறுக்கப்பட்ட மகாவலி பொறியியலாளர் சேவை தனியார் நிறுவனம் ஆகிய நிறுவனங்களை கலைத்தல்
இலங்கை மகாவலி அதிகார சபை சட்டத்தில் 13 (18) சரத்திற்கு அமைவாக கூட்டுத்தாபனமாக்கப்பட்டுள்ள இதுவரை நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்ற இலங்கை மகாவலி அதிகார சபைக்கு உட்பட்ட நிறுவனமான வரையறுக்கப்பட்ட இயற்கை வள முகாமைத்துவ சேவை தனியார் நிறுவனம், வரையறுக்கப்பட்ட மகாவலி வென்வர் கெபிட்டல் தனியார் நிறுவனம் வரையறுக்கப்பட்ட மகாவலி பொறியியலாளர் சேவை தனியார் நிறுவனம் ஆகிய நிறுவனங்களை கலைப்பதற்காக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. தெரிவு செய்யப்பட்ட இடங்களுக்கு நேர அட்டவணையின் கீழ் நாட்டின் உள்ளக விமான சேவைகளை நடத்துவதற்காக உள்ளக விமான சேவை நிறுவனங்களுக்கு (VGF) பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்கு நிதியை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை எட்டுதல்
சுற்றுலா தொழிற்துறையை ஊக்குவிக்கும் கொடுப்பனவு என்ற ரீதியில் ஒரு முறை பயணத்திற்காக மாத்திரம் 100 தொடக்கம் 150 வரையிலான அமெரிக்க டொலர்கள் ஆகக்கூடிய கட்டணத்தின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பயண இலக்கு நேர அட்டவணையின் கீழ் நாட்டின் உள்ளக விமான சேiயை நடைறைப்படுத்துவதற்காக உள்ளக விமான சேவை நிறுவனத்தை தெரிவு செய்து அதில் விமான பயணத்தை மேற்கொள்ளக்கூடிய வகையில் செலவு மற்றும் வருமானத்திற்கு இடையில் மாற்றம் இருக்குமாயின் அந்த மாற்றத்தை ஈடுசெய்வதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவையினால் தற்பொழுது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக அரச தனியார் பங்குடைமைக்கான தேசிய பிரதிநிதியினால் தயாரிக்கப்பட்டுள்ள ஆவணத்தில்; தெரிவுசெய்யப்பட்ட விமான நிறுவனத்தினால் எதிர்வரும் வருடத்திற்கான விரிவான நடவடிக்கை புள்ளி ஆவணம் மற்றும் வர்த்தக திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு அமைவாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அதன் நிறுவனத்துடன் (VGF) பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்கு நிதியை வழங்கும் உடன்படிக்கையை எட்டுவதற்காக கௌரவ பிரதமர் அவர்களும் தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அவர்களும் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06. ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படவுள்ள உத்தேச இலங்கையின் உணவு பாதுகாப்பு மற்றும் தரத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் திட்டம் மற்றும் இலங்கையின் தேசிய ரீதியில் தீர்மானிக்கப்படும் தொழிற்சாலை பிரிவின் பங்களிப்பு திட்டம்
இலங்கையில் ஒன்றிணைந்த கிராமிய அபிவிருத்திக்கும் ஜனநாயக நிர்வாகத்திற்கும் மீளக்கட்டியெழுப்புதலுக்கும் ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் இலங்கைக்காக பல்லினத்தரப்பு குறீட்டு திட்டம் 2014 - 2020 ஐரோப்பிய ஒன்றியத்தினால் நன்கொடை நிதியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் ஒன்றிணைந்த கிராமிய அபிவிருத்தி பிரிவிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 110 மில்லியன் யூரோக்கள் 'இலங்கையின் உணவு பாதுகாப்பு மற்றும் தரத்திற்கு ஒத்துழைப்பு வழங்கல்' மற்றும் இலங்கை தேசிய ரீதியில் தீர்மானிக்கப்படும் கைத்தொழில் பிரிவுக்கு பங்களிப்யை வழங்குதல் என்ற திட்டத்திற்காக முறையே 11 மில்லியன் யூரோக்கள் மற்றும் 7.81 யூரோ மில்லியன்களை மானியமாக பெற்றுக்கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் மானிய உடன்படிக்கையை எட்டுவதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மற்றும் பிரிட்டனின் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்திற்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
உயர் கல்வி துறையில் கல்வி புரிந்துணர்வை மேம்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் பிரிட்டனின் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்திற்கு இடையில் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்காக நகர திட்டமிடல் நீர் விநியோகம் மற்றும் உயர் கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. இராஜதந்திர விசேட கடமை மற்றும் சேவை கடவுச்சீட்டை கொண்டுள்ள நபர்களுக்கு விசா அனுமதியை பெற்றுக்கொள்வதில் இருந்து விடுவிப்பதற்காக கம்போடியா அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையில் எட்டப்பட்ட உடன்படிக்கை
இரு நாடுகளுக்கு இடையில் நிலவும் நட்புறவை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இராஜதந்திர விசேட கடமை மற்றும் சேவை வெளிநாட்டு கடவுச்சீட்டை கொண்டுள்ள நபர்களுக்கு விசா அனுமதியை பெற்றுக் கொள்வதிலிருந்து விடுவிப்பதற்காக கம்போடியா அரசாங்கம் மற்றும் இலங்கைக்கு இடையில் ஒப்பந்தத்தை எட்டுவதற்காக உள்ளக மற்றும் பொதுநிர்வாக அலுவல்கள் மற்றும் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி சபை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. 2019 ஆம் ஆண்டுக்காக முப்படை சிவில் பாதுகாப்பு திணைக்களம் தேசிய மாணவர் படையணி இலங்கை பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படைக்கான உத்தியோகபூர்வ சீருடை மற்றும் ஏனைய துணி வகைகளை விநியோகித்தல்
முப்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சிற்கு உட்பட்ட ஏனைய அரச நிறுவனங்களின் சீருடை தேவைகளை தேசிய ஆடை தயாரிப்பாளர்களிடமிருந்து பெற்றுக் கொள்வதற்காக 2005ஆம் ஆண்டில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. இதற்கமைவாக 2019ஆம் ஆண்டுக்கு இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம், தேசிய மாணவ படையணி, இலங்கை பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை ஆகியவற்றிற்கு தேவையான உத்தியோகபூர்வ ஏனைய சீருடை வகைகளை கொள்வனவு செய்வதற்காக கோரப்படும் விலைகளுக்கு அமைவாக தேசிய ஆடைகளை ஒதுக்கீடு செய்யும் குழுவின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட தேசிய தயாரிப்பாளர்களிடம் அந்த சீருடை வகைகளை பெற்றுக்கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. புத்தளம் நிலக்கரி அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்தல்
புத்தளம் நிலக்கரி அனல்மின் நிலையத்திற்கு 3 இலட்சம் மெற்றிக் தொன் நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட நிலையியல் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய M/s Swiss Singapore Enterprises Pte Ltd, 65 Chulia Sreet # 48-05 OCBC Centre Singapore என்ற நிறுவனத்திற்கு வழங்குவதற்கான அனுமதியை பெற்றுக் கொள்வதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் 2020 மே மாதம் 31ஆம் திகதி வரையில் டீசல் மற்றும் ஜெட் ஏ-1 ஐ இறக்குமதி செய்வதற்காக நீண்டகால ஒப்பந்தத்தை எட்டுதல்
2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் திகதி மே மாதம் 31ஆம் வரையிலான 8 மாத காலப்பகுதிக்குள் 1.04 மில்லியன் டீசல் பீப்பாய்களையும் 1.28 மில்லியன் ஜெட் ஏ-1 பீப்பாய்களையும் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய ஐக்கிய அரபு எமிரேட் இராஜ்யத்தின் M/s Mena Energy DMCC., என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் கனிய வள அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. 2019 அக்டோபர் மாதம் 01ஆம் திகதி தொடக்கம்; 2020 மே மாதம் 31ஆம் திகதி வரையில் பெற்றோலை இறக்குமதி செய்வதற்காக நீண்டகால ஒப்பந்தத்தை எட்டுதல்
2019 அக்டோபர் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் 2020 மே மாதம் 31ஆம் திகதி வரையான 8 மாத காலப்பகுதிக்குள் 9 இலட்சம் பீப்பா பெற்றோலை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட நிலையியற் பெறுகைக்குழவின் சிபாரிசுக்கு அமைய சிங்கப்பூர் M/s Vitol Asia Pte .Ltd நிறுவனத்திடம் வழங்குவதற்காக பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் கனிய வள அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. ஒருகொடவத்தை - அம்பத்தலை வீதியில் வீதிப்பகுதியை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல்
ஒருகொடவத்தை - அம்பத்லை (B435) வீதியில் முதலாவது 2.9 கிலோமீற்றர் பகுதியையும் 4.2 கிலோமீற்றர் தொடக்கம் 5.44 கிலோமீற்றர் வரையிலான பகுதியையும் புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான (2வது கட்டம்) ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கு அமைய M/s Tudawe Brothers (Pvt) Ltd.,என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் கனிய வள அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. இலங்கை துறைமுக அதிகார சபைக்காக மேலதிக பைலட் லொஞ்சர் வள்ளத்தை கொள்வனவு செய்தல்
இலங்கை துறைமுக அதிகார சபைக்காக பைலட் லொஞ்சர் 2 வள்ளங்களை விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை கொழும்பு பிஎல்சி இலங்கை நிறுவனத்திடம் வழங்குவதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. நடவடிக்கைகள் இடம்பெறும் துறைமுகத்திற்குள் மேற்கொள்ளும் செயல்திறன் மிக்க கப்பல் சேவையை வழங்குவதற்காக மேலே குறிப்பட்டப்பட்ட 2 வள்ளங்களுக்கு மேலதிகமாக மேலும் பைலட் லொஞ்சர் வள்ளத் தேவை இலங்கை துறைமுக அதிகார சபையினால் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன,; அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய பெறுகை வழிகாட்டல் 2006 இல் குறிப்பிடப்பட்டுள்ள மறுதருவிப்பு கொள்வனவு முறையின் மூலம் வழங்கப்பட்டுள்ள நிதியின் கீழ் மேலே குறிப்பிடப்பட்ட ஒப்பந்த ஒழுங்குறுத்தல் மற்றும் நிபந்தனையின் அடிப்படையில் இலங்கை துறைமுக அதிகார சபைக்காக மேலதிக பைலட் லொஞ்சர். வள்ளமொன்றை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை கொழும்பு டொக்கியாட் பிஎல்சி நிறவனத்திற்கு வழங்குவதற்காக துறைமுகம் மற்றும் கடல் நடவடிக்கைகள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. பயங்கரவாதத்தை தடுப்பதற்கான சாதகமான உடனடி கட்டமைப்பை அறிமுகப்படுத்துதல்
புதிய வடிவமைப்பில் தோன்றும் பயங்கரவாதத்தை தடுப்பதற்காக தற்காலிகமாக வரையறுக்கும் உத்தரவு பல்வேறு வகையில் பயங்கரவாதம் ஊக்குவிக்கப்படுவதை தடைசெய்தல் மற்றும் பெயர் குறிப்பிடப்படும் வெளிநாட்டில் இருப்பது மற்றும் உயிரியல் ரீதியில் கட்டுப்பாட்டை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட துறைகளினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைக்கு அமைவான தற்போதுள்ள சட்டத்தில் திருத்த சட்டமூலத்தை மேற்கொள்வதற்கு அல்லது பொருத்தமான புதிய சட்ட திருத்தத்தை மேற்கொள்வதற்காக சட்ட திருத்த தயாரிப்பு பிரிவிடம் சமர்ப்பிப்பதற்காக கௌரவ பிரதமர் அவர்களும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அவர்களும் கூட்டாக சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. அனைவருக்கும் நிழல் என்ற புதிய மாதிரிக்கிராமம் 101 பயனாளிகளுக்கு உரித்துடையதாக்குதல்
2015ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட அனைவருக்கும் நிழல் என்ற தேசிய வீடமைப்பு வேலைத்திட்டமானது மாதிரி கிராமத்திட்டமாகும். இந்த வேலைத்திட்டத்தின் கீழ் வீட்டை அடிப்படையாகக் கொண்டு பொதுமக்களுக்கு தேவையான ஏனைய அனைத்து வசதிகளையம் கொண்ட பயனாளிகளுக்கு உரிமையாக்கப்பட்ட மாதிரிக்கிராம அளவு 286 ஆவதுடன், இவற்றில் புதிய 101 கிராமம் 2019ஆம் ஆண்டு உலக குடியிருப்பு தினத்தன்று ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி க்கு முன்னதாக 2 வாரத்திற்கு அதாவது செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி தொடக்கம் அக்டோபர் மாதம் 7ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் வீட்டு உரிமையை எதிர்பார்த்துள்ள பயனாளிகளான பொதுமக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சரவை அறிந்து கொள்வதற்காக வீடமைப்பு நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.