கிண்ணியாவில் உள்ள சங்கங்களுக்கு உபகரணங்கள் வழங்கலும் LED வீதி மின் விளக்குகள் வழங்கும் நிகழ்வும்

ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பதிவு செய்யப்பட்டு தெரிவு செய்யப்பட்ட சங்கங்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றுள்ளது
கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி தலைமையில் இன்று (19) கிண்ணியா பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற குறித்த சகல விதமான பொருட்களும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களின் வருடாந்த பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கிண்ணியாவில் உள்ள சுமார் 15 சங்கங்களுக்கு 13 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.
சங்கங்கள் பலமாக செயற்படுவதற்கு இக் குறித்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தளபாட உபகரணங்கள், LED மின்குமிழ்கள்,ஊடக உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டது
இதில் கிண்ணியா நகர சபை மற்றும் கிண்ணியா பிரதேச சபைகளுக்கு வர்த்தகவாணிப கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள மீள்குடியேற்ற செயலணி திட்டம் ஊடாக தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான மொத்தமாக 20 இலட்சம் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்ட LED வீதி மின் விளக்குகளும் வழங்கப்பட்டன .
குறித்த நிகழ்வில் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.
மேலும் இதில் பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா, கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான நிஸார்தீன் முஹம்மட்,எம்.எம்.மஹ்தி,எம்.டி.ஹரீஸ் மற்றும் கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் ராலியா கிண்ணியா நகர செயலாளர் றியாஸ், உள்ளிட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டார்கள்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -