சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலய மாணவி 191 புள்ளிகளைப் பெற்று வலயத்தில் முதலிடம்

அகமட் எஸ். முகைடீன்-
ரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலய மாணவி ஆர். ஆயிஷா ஹனீன் 191 புள்ளிகளைப் பெற்று சம்மாந்துறை கல்வி வலயத்தில் முதலாமிடத்தை பெற்றுள்ளார்.
சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் சஹ்துல் நஜீம் உள்ளிட்ட வலயக் கல்வி அலுவலகத்தின் அதிகாரிகள் இன்று (7) திங்கட்கிழமை தாறுல் உலூம் வித்தியாலயத்திற்கு திடீர் விஜயம் செய்து வலயத்தில் முதலிடம் பெற்ற அம்மாணவியை பாராட்டி பரிசில் வழங்கி கௌரவித்தனர்.
அத்தோடு தாறுல் உலூம் வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம். கலீல் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்திய ஆசிரியைகளான திருமதி எம்.எம். நசீர், திருமதி எஸ்.எப்.எம். யூசுப் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களையும் பாராட்டடி வாழ்த்தினர்.
இப்பாடசாலையில் 55 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி வெட்டுப்புள்ளிக்கு மேலான புள்ளிகளை 9 மாணவர்கள் பெற்றுள்ளதோடு 70 இற்கு மேலான புள்ளிகளை 52 மாணவர்கள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -