வீடமைப்பு நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அனுசரணையுடன் கல்முனை கலாசார மத்திய நிலையத்தின் முனைமகுடம் விழாவும் கலை வாசல் சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வு கலாசார மத்திய நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரி, ஜ.எல்.றிஸ்வானின் ஒருங்கிணைப்பில்
கல்முனை பிரதேச செயலாளர், எம்.எம்.நஸீர் அவர்களின் தலைமையில் கல்முனை கலாசார மத்திய நிலையத்தில் (19) இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சட்டத்தரணி, ஏ.எம் அப்துல் லத்தீப் அவர்களும் சிறப்பு அதிதியாக பி.எம்.நிலோபர் அவர்களும் கலந்து கொண்டார்கள். இதன் போது பிரதேசத்தின் மூத்த கலைஞர்கள் 15 பேர்கள் கெளரவிக்கப்பட்டதுடன்
இப்பிரதேசத்தில்
கலைச் சேவைக்கு ஆற்றிய பணிகளுக்காக 18 பேர்களுக்கு சேவை நலன் பாராட்டும் கிடைத்தது.