பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3ஆம் இடத்தைப் பிடித்த லொஸ்லியா மன்னிப்புக்கோரினார்..

ண்மையில்தான் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி நிறைவடைந்தது. இந்த போட்டியின் வெற்றியாளராக முகின் அறிவிக்கப்பட்டார். சாண்டி ரன்னர் அப்பாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், பிக்பாஸ் 3 போட்டியில் போட்டியாளராக பங்குபெற்று ஃபைனல் வரைக்கும் வந்த லாஸ்லியா சமூக வலைதளத்தில் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் 7 கோடி வாக்குகளை பெற்று வெற்றியை கண்டார் மலேசியாவைச் சேர்ந்த முகின் ராவ். இரண்டாவது இடத்தை டான்ஸ் மாஸ்டர் சாண்டி பிடித்தார். அவரையடுத்து 3வது இடத்தை லாஸ்லியாவும், 4வது இடத்தை ஷெரினும் பெற்றனர். இந்த நிகழ்ச்சி முடிவடைந்து சாதாரண வாழ்க்கைக்கு திரும்பியுள்ள போட்டியாளர்கள் சமூக வலைதளத்தில் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் “முதலில் நான் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு ஆதரவளித்து எல்லையற்ற அன்பைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. என்னைப் பொறுத்தவரையில் நன்றி என்பது மிகச் சிறிய வார்த்தையாகவே கருதுகிறேன். அது அனைவருக்கும் போதுமானதாக இருக்காது. நாம் உங்கள் அனைவரையும் மிகவும் நேசிக்கிறேன். நீங்கள் அளித்த இந்த ஆதரவு எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. நான் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இல்லாததற்கும், ஒவ்வொருவரின் கேள்விகளுக்கும் பதிலளிக்காததற்கு என்னை மன்னித்துவிடுங்கள். சத்தியமாக உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்வேன். ஐ லவ் யூ சோ சோ மச்” என்று கூறியுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -