அதன் ஒரு அங்கமாக தேசிய கொள்கைகள் , பொருளாதார விவகாரங்கள், மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின்
கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக வாழைச்சேனை வை. அஹமட் வித்தியாலயத்தின் மூன்று மாடிக் கட்டட வேலைகளை பூரணப்படுத்துவதற்காக 50இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,
வாழைச்சேனை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரான எம்.ஐ.எம் இம்தியாஸ் உட்பட கட்சியின் கல்குடா பிரதேச முக்கியஸ்த்தர்கள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக குறித்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆவணங்கள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களினால் பாடசாலையின் அதிபரிடம் இன்று கையளிக்கப்பட்டதுடன், குறித்த பாடசாலையில் இருந்து இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டியதுடன் பரிசுப்பொதிகளும் வழங்கி வைக்ப்பட்டது.
இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் , கட்சி முக்கியஸ்த்தர்கள், அமைச்சரின் இணைப்பு செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.