மாகொல முஸ்லிம் அனாதை நிலைய 57 வது நிறைவு விழா


மாகொல முஸ்லிம் அனாதை நிலையம் 1962ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அல்ஹாஜ் ஜாபிர் ஹாஜியார் அவர்களின் தலைமைத்துவ வழிகாட்டலில் இயங்கிவந்த இந் நிலையம் அதன் 57 வது நிறைவு விழா விழாவினை எதிர்வரும் 13ம் திகதி ஞாயிற்றுக்கிமை மாகொல முஸ்லிம் அநாதை நிலையத்தில் மிகவிமர்சையாக நடைபெற பழைய மாணவர் சங்கத்தினர் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கல்வி மற்றும் மார்க்க கல்வி என இருபெரும் பிரிவாக இயங்கிவரும் இந் நிலையத்தில் இருந்து பல பட்டதாரிகளும், ஆலிம்களும், மௌலவி ஹாபிழ்களும் இன்று நாடளாவியரீதியில் சேவையாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.
மேற்படி விழாவில் சகல பழைய மாணவர்களும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13-10-2019)
தவறாது கலந்து சிறப்பிக்குமாறு சங்க நிகழ்ச்சி ஏட்பாட்டுக்குழு கேட்டுக்கொள்கின்றது.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -