800 இற்கும் அதிகமான குடும்பங்களுக்கு குடி நீர் வசதி வழங்கும் இஷாக் ரஹுமான்.

ஐ.எம்.மிதுன் கான், கனேவல்பொல-

ம்பெரலிய செயற்றிட்டத்தின் கீழ் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்கள் மேற்கொண்ட நிதியொதுக்கீட்டின் கீழ் நோச்சியாகம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஹல்மில்ல குலம் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட பொது குடி நீர் கிணரு 2019.10.06 அன்று பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்பட்டது.

சுத்தமான குடி நீர் வசதியின்றி தமது அன்றாட வாழ்வில் நீர் சார்ந்த பல பிரச்சினைகளை எதிர் நோக்கி வந்த நொச்சியாகம ஹல்மில்ல குலம், முஸ்லிம் கொலனி ஆகிய கிராம மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் இசாக் ரஹுமானிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இக்கிணறு நிர்மாணிக்கப்பட்டது.

அடிக்கல் நடப்பட்டு சுமார் ஒரு மாத காலத்திற்குள்ளேயே இதன் வேலைகள் முடிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும். சுமார் 800 இற்கும் அதிகமான குடும்பங்கள் இக்கிணற்றின் மூலம் குடி நீரினை பெற்று பயனடைந்துகொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -