சர்வதேச ரீதியில் சாதனை படைக்க காத்திருக்கும் கல்முனை பற்றிமா கல்லூரி மாணவன்


பாறுக் ஷிஹான்-
திகரித்து வரும் வீதி விபத்துக்களால் ஏற்படும் மரணத்தை தவிர்க்கும் முகமாக கல்முனை பற்றிமாக் கல்லூரி மாணவன் புதிய தலைக்கவசம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
எதிர்வரும் 08ம் திகதி தொடக்கம் 12 வரை நடைபெறவுள்ள சர்வதேச புத்தாக்குனர் போட்டியில் பங்குபற்றுமுகமாக இந்தோனேசியாவிற்கு கிழக்கு மாகணத்திலிருந்து இந்த வருடம் தெரிவுசெய்யப்பட்ட கல்முனை பற்றிமா கல்லூரியின் கணித பிரிவு கி.முகேஷ் ராம்(வயது-17) என்ற மாணவன் தனது கண்டுபிடிப்பு தொடர்பில் கருத்து கூறுகையில்,
இரவு வேளையில் ஆள்நடமாற்றமற்ற பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து நடைபெற்றால் இணைத்துக்கொள்ளப்பட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக தகவல் வழங்கி மரணத்தை தவிர்த்துக் கொள்வதற்கான தலைக் கவசத்தினை கண்டுபிடித்துள்ளேன். எனது கண்டுபிடிப்பானது விபத்துக்கள் நடைபெற்ற இடத்தினை தெரியப்படுத்தும் நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தொடுகை மென்பொருளை பயன்படுத்தி பாதிப்புக்கள் சம்பந்தமான குறுஞ்செய்தி மூலம் கைத்தொலைபேசிக்கு தகவல்கள் அறிவுறுத்தப்படும் வகையில் 5000.00 ரூபாய்க்குட்பட்ட விலையில் வடிவமைக்க பட்டுள்ளது.
பெளதீகவளங்கள் இல்லாத நிலையில் இவ்வாறான மாணவர்களது கண்டுபிடிப்பானது பாராட்டத்தக்க விடயமாகும்இ இவ்வறான பாடசாலைகளுக்கு பெளதீக வளங்கள்இ தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்திகொடுக்கப்படுமானால் விஞ்ஞான கண்டுபிடிப்புகளிள் நம் நாடு மேலும் வளர்ச்சியடையும் என கல்லூரியின் அதிபர் அருட்தந்தை எஸ். சந்த்தியாகு கருத்து தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -