பேரம் பேசும் சக்தி எங்கே...?


சட்டியிலிருந்து அடுப்புக்கும் .... அடுப்பிலிருந்து சட்டிக்கும்
இதுதானா நமது தலைவிதி...!

பதிவிரதைக்குப் பத்தினித்தனம் சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை.
பத்தினி பத்தினிதான்.
நமது முஸ்லீம் அரசியல் தலைமைகள் பதிவிரதையா அல்லது பச்சை வேசியா..?

றனூஸ்-

வாசியுங்கள்....
இரண்டு பிரதான சனாதிபதி வேட்பாளர்களில் எவர் மீதும் முஸ்லீம் சமூகம் பாரிய நம்பிக்கைகளைக் கொண்டிருக்கவில்லை.
கடந்த காலத்தில் முஸ்லீம் சமூகம் எதிர்கொண்ட பல சவால்களின் போதும் அதற்க்கு முந்தய அரசியல் களத்தில் இரண்டு வேட்பாளர்களினதும் அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளினதும் நடவடிக்கைகளில் முஸ்லீம் சமூகம் பெரும் அதிருப்தியடைந்துள்ளது என்றே கூற வேண்டும்.
அதே போன்று இலங்கை முஸ்லீம் அரசியல் தலைவர்கள் எவர் மீதும் முஸ்லீம் சமூகம் பாரிய திருப்தியும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வதற்குமில்லை.
ஆக இலங்கை முஸ்லிம்களிடையே ஒரு தலைமைத்துவ இடைவெளி பாரிய அளவில் உருவாகிக் கொண்டு செல்கிறது.
கடந்த ஜனாதிபதித்தேர்தலில் முஸ்லீம் சமூகம் முஸ்லீம் அரசியல் தலைவர்கள் எவரினது முடிவையும் காத்திராமல் தாங்களே ஒரு முடிவுக்கு வந்து வாக்களித்தமை இதனை உறுதிப்படுத்தியது.
அவ்வாறு முஸ்லீம் சமூகம் வாக்களித்த நல்லாட்சி அரசும் அரசாங்கமும் அண்மைக்காலத்தில் முஸ்லீம் சமூகத்தின் மீதான பல்வேறு பாதிப்புச் சம்பவங்களின் போது வினைத்திறனாகவும் சட்டவாட்சியை நடைமுறைப்படுத்தாத நிலையிலும் இருந்த பொழுது அந்த அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்த முஸ்லீம் தலைமைகள் முஸ்லீம் சமூகம் நல்லாட்சிக்கு ஆதரவு வழங்க எடுத்த முடிவின் காரணமாக தங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்ற வாதத்தை முன்வைத்தமையை அவதானிக்க முடிந்தது.
இதன் கருத்து முஸ்லீம் மக்கள் நமது தலைமைகளை பேரம்பேசி முடிவெடுக்கும் அவகாசத்தை வழங்காததால் எங்கள் கைகள் கட்டப்பட்டு இருக்கிறது இல்லாவிட்டால் நாங்கள் சாதித்திருப்போம் என்பதாகும்.

இப்பொழுது முஸ்லீம் சமூகம் மிகவும் நிதானமாக இருக்கிறார்கள்...
தலைவர்களுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது.....
இரண்டு பிரதான வேட்பாளர்களிடமும் சமூகம் சார்ந்து பேசலாம்....
ஏற்றுக்கொள்ளும் ஒருவருடன் ஒப்பந்தம் செய்யலாம்....
அதன் அடிப்படையில் ஆதரவு வழங்கலாம்....
ஆனால் என்ன நடந்திருக்கிறது......


இலங்கை முஸ்லிம்கள் கோத்தாவின் மீது நியாயமான அச்சம் கொள்வதற்கு நிறையவே காரணம் உள்ளது....
அதே நேரம் சஜித் அவர்களை கண்மூடித்தனமாக நம்புவதற்கு இலங்கை முஸ்லிம்கள் தயங்குகிறார்கள்....


இது இயல்பான சமூகச் சூழ்நிலையே.....
இந்த நிலையில்தான் முஸ்லீம் அரசியல் தலைமைகள் நாம் யாருக்கு வாக்களித்தால் நல்லது என்று மக்களைத் தெளிவோட்டும் அறிவூட்டும் வேலைகளை செய்ய வேண்டும்.
இன்று நமது அரசியல் தலைவர்களில் பிரதான இரு தலைமைகளும் சஜித் அவர்களின் தெரிவினையே விரும்புகின்றனர் என்பது தெளிவாகி இருக்கிறது.
அதிகமான முஸ்லீம் மக்களும் அதே முடிவினையே எடுக்கக்கூடிய சூழ்நிலை காணப்படுகிறது.
இந்நிலையில் நமது பிரதான இரு முஸ்லீம் தலைவர்கள் முஸ்லீம் சமூகம் சார் பிரச்சினைகள் குறித்து எந்தவித ஒப்பந்தங்களும் இன்றி நிபந்தனை அற்ற ஆதரவை அளித்துள்ளனர்.
சொல்லப்போனால் இரண்டு பிரதான கட்சிகளும் முஸ்லீம் சமூகத்துடன் அல்லது அதன் தலைவர்களுடன் எந்தவித ஒப்பந்தத்துக்கு தயாரில்லை என்பதனையே நிலைமைகள் எடுத்துக்காட்டுகின்றது.
சென்ற ஜனாதிபதித் தேர்தலில் நம்பிக்கையுடன் தலைவர்களைக் கவனியாது நம்பிக்கையுடன் வாக்களித்த இலங்கை முஸ்லிம்கள் இப்போது மிகவும் குழம்பிப்போய் இருக்கிறார்கள்.....
அவர்களுடைய பேரம் பேசும் சக்தியுடன் அவர்களுக்காக பேசும் தலைமைகளும் தொலைந்து போயுள்ளது.....யார் பொறுப்புக்கு கூறுவது...?

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -