கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்தை தம்பர அமில தேரர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் முதலாவது பிரசார கூட்டத்தில் அசாதாரணமான முறையில் சிறை வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்வதாக தெரிவிக்கப்பட்ட கருத்தை தம்பர அமில தேரர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

காலி முகத்திடலில் நேற்று நடைபெற்ற சஜித் பிரேமதாசவின் முதலாவது பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போதே தேரர் இந்த விடயத்தை விமர்சித்துள்ளார்.

நவம்பர் 16 ஆம் திகதி ஜனாதிபதியை தெரிவு செய்யவே தேர்தல் நடைபெறுவதாகவும் மாறாக நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை தெரிவு செய்ய தேர்தல் நடைபெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ´அன்று மெதமுலனையில் சகோதரனை முன் ஜன்னலில் தொங்கவிட்ட தமக்கு இன்று தம்பியை பின் ஐன்னலில் தொங்கவிடுவது பெரிய காரியம் அல்ல´ எனவும் கூறினார்.அதெ

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -