கல்முனைப் பிராந்திய சுகாதாரசேவைப் பதில் பணிப்பாளராக டாக்டர் சுகுணன் நியமனம்!




காரைதீவு நிருபர் சகா-
ல்முனைப்பிராந்திய சுகாதாரசேவை பதில் பணிப்பாளராக வைத்தியகலாநிதி டாக்டர் குணசிங்கம் சுகுணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளராகவிருந்த டாக்டர் அலாவுதீன் கிழக்குமாகாண சுகாதாரசேவைப்பணிப்பாளராக பதவியுர்வுபெற்றுச்சென்றதன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அங்கு பிரதிப்ணிப்பாளராகவிருந்த டாக்டர் சுகுணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்குமாகாண சுகாதாரசேவைப்பணிப்பாளராகவிருந்த டாக்டர் எஸ்.அருள்குமரன் நேற்றுமுன்தினம் இந்நியமனத்தை வழங்கிவைத்தார்.
.
களுவாஞ்சிக்குடியைச்சேர்ந்த டாக்டர் குணசிங்கம் சுகுணன் 2000ஆம் ஆண்டில் வைத்தியதுறையில் சேர்ந்தவர். 2011இல் வைத்திய நிருவாகத்துறையில் முதுமாணிப்பட்டம் பெற்றிருந்தார்.
அதன்காரணமாக அவர் களுவாஞ்சிக்குடி ஆதாரவைத்தியசாலைக்கு வைத்தியஅத்தியட்சகராக நியமிக்கப்பட்டார். அங்கு எட்டுவருடங்கள் சிறப்பான சீரிய சேவையாற்றினார். இவரது காலத்திலே அவ்வைத்தியசாலை வரலாறுகாணாத பலஅபிவிருத்திகளைக்கண்டு புதுப்பொலிவு பெற்றுவிளங்கியது. ஆதாரவைத்தியசாலை ஏ தரத்திற்கு தரமுயர இவரது பொற்காலமே வழிவகுத்தது.தேசிய உற்பத்தித்திறன்விருதுகளை தொடர்ச்சியாகப்பெற வழிவகுத்தவரும் இவரே.
இவ்வாண்டு 2019 டாக்டர் சுகுணன் கல்முனைப்பிராந்திய பிரதி சுகாதாரசேவைப்பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். தற்போது பதில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நிருவாகவைத்தியத்துறையில் முதுமாணிப்பட்டம்பெற்ற வைத்தியர்களுள் சிரேஸ்டதரத்தில் சுகுணன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளியன்று(11) கடமையை பொறுப்பேற்கிறார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -