மெக்சிக்கோவில் சியாபாஸ் மாகாணத்தின் லாஸ் மார்கரிட்டாஸ் நகர மேயர் ஜோர்ஜ் லூயிஸ் எஸ்காண்டோன் ஹெர்னாண்டெஸ் என்பவர். தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மேயர் அலுவலகத்திற்குள் கட்டை, கம்புகளுடன் நுழைந்து மேயரை தாக்கி வெளியே இழுத்து வந்துள்ளனர். இதோடு நிறுத்தாமல் வாகனமொன்றில் கட்டி, நடுவீதியில் தரதரவென இழுத்துச் சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், கட்டி இழுத்து செல்லப்பட்ட மேயர் உயிர்தப்பியுள்ளார் எனவும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.