பி.எம்.எம்.ஏ.காதர்-
வாழைச்சேனை பசுமை கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளர் அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய வெய்யில் மனிதர்கள் (மொழிபெயர்ப்பு நாவல்),எனக்குள் நகரும் நதி(பத்தியெழுத்துத் தொகுதி)ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை(04-10-2019)பி.ப.4.00 மணிக்கு ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ஓய்பெற்ற கல்வி அதிகாரி ஏ.எம்.ஏ.காதர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில் பிரதம அதிதியாக விவசாய,நிர்ப்பாசண,கிராமிய பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொள்ளவுள்ளார்.சிறப்பு அதிதியாக் கலந்து கொண்டு முதற்பிரதி பெறவுள்ளார் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷப்லி

எனக்குள் நகரும் நதி; நூல்பற்றி கிழக்குப் பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரி.எம்.ரிஸ்வி,வெய்யில் மனிதர்கள் நூல்பற்றி முன்னோடி எழுத்தாளர் நாவலாசிரியர் உமா வரதராஜன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
முன்னோடிக் கவிஞர் சோலைக்கிளி சிறப்புரையாற்றவுள்ளார். ஷமிலா ஷெரீஃப்,எம்.ஏ.சி.எம்.றுமைஸ் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளனர்.