“அமைச்சர் இல்லாத செந்தில் தொண்டமான் அரச வரப்பிரசாதங்களை அனுபவிக்கிறார்”

தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்டார் திலகர் எம்பி
ல்லாட்சி அரசாங்கத்தைப் பற்றி விமர்சித்து பொது ஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கொட்டபய ராஜபக்ச வுக்கு பிரசாரம் செய்துவரும் ஊவா மாகாண முன்னாள் கல்வி அமைச்சரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உபதலைவருமான செந்தில் தொண்டமான் தற்போது மாகாண சபை உறுப்பினரோ மாகாண அமைச்சரோ அல்ல. ஆனால் அத்தகைய பிரபுக்கள் பாதுகாப்பு பிரிவை தான் இன்னும் பயன்படுத்திக்கொண்டுதான் நல்லாட்சி அரசாங்கத்தை விமர்சித்து வருகிறார்.எனவே இத்தகைய இரட்டை வேஷதாரிகளை அம்பலத்துக்கு கொண்டுவரும் பொருட்டு இது பற்றிய முறைப்பாட்டை தேர்தல் ஆணையத்துக்கு அறிவித்துள்ளதாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து ஐக்கிய தேசிய கட்சியின் நுவரஎலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மஸ்கெலியா தொகுதி அமைப்பாளருமான கே.கே.பியதாசவின் ஏற்பாட்டில் ஹட்டன் நகரில் பிரசாரக் கூட்டம் ஞாயிறு மாலை இடம்பெற்றது. ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, அமைச்சர்களான பழநி திகாம்பரம், நவீன் திசாநாயக்க உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்ட இந்த பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே திலகராஜ் எம்பி மேற்படி கருத்தைத் தெரிவித்தார்.அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இப்போது இந்த நாடு எதிர் கொண்டிருப்பது 2020 ல் யார் நாட்டை ஆளும் ஜனாதிபதி என்பதை தீர்மானிக்கும் தேர்தலை ஆகும். 20 20 என்றவுடன் இப்போது பிரபலமாகியுள்ள கிரிக்கட் விளையாட்டையே நினைவுப்படுத்துகிறது. நம்நாட்டில் கிரிக்கெட் என்றவுடன் நினைவுக்கு வருபவர் நமது நாட்டுக்கு உலகக்கிண்ணத்தை வெற்றிகொண்ட தலைவர் அர்ஜூன ரணதுங்க ஆவார். அவர் இப்போது அமைச்சராகவும் உள்ளார். அவர் அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரது தந்தையார் ரெஜி ரணதுங்க ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மூத்த தலைவர். எனினும் அர்ஜுன ரணதுங்க ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை பின்தொடர்ந்து கோத்தபாயவை ஆதரிக்கவில்லை. மாறாக மக்கள் தலைவனின் மகனான சஜித் பிரேமதாசவையே ஆதரிக்கிறார். எமது அணியிலேயே உள்ளார்.

ஆனால் , எமது சாமிமலை தாத்தாவின் பேரன் கண்டி முத்தையாவின் மகன் முத்தையா முரளிதரன் கோத்தா வந்தால் நாடு அமைதிப் பூங்காவாக மாறும் என அவருக்காக பேசிவருகிறார். வெள்ளை வேன் வேலை செய்தபோது அவர் இந்தியாவில் ஐபிஎல் ஏலத்தில் விற்கப்பட்டிருந்ததனால் அது தெரியாமல் இருக்கலாம். தவிரவும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் உள்ளிட்ட விடயங்களில் மலையக அரசியல்வாதிகளை குறைகாணும முரளிதரன் தோட்டத் தொழிலாளர்களை காப்பாற்ற வந்த தூதராக தன்னைக் காட்ட முனைகிறார். அவர் வருவது மக்களைக் காப்பாற்ற அல்ல.அவரது தம்பியை காப்பாற்ற. அவரது தம்பியின் பைல்கள் தொடர்பில் கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் பேசப்பட்டது ஹன்சாட்டில் உள்ளது. அதன் அடிப்படையில் சொல்கிறோம். அந்த பைல் மகிந்த கையில் உள்ளது. அது வெளியே வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் முரளி கொட்டாவை ஆதரிக்கிறாரே தவிர மலையக மக்களுக்கு நன்மை செய்ய அல்ல. இது தெரியாமல் அவரிடம் கிடைக்கும் 50 ஆயிரம் ரூபாவுக்கு அவர் பின்னால் செல்லும் அல்லக்கைகள் சிலர் முரளியை தூக்கி நிறுத்த முயல்கிறார்கள்.

முரளி சிறந்த பந்துவீச்சாளர். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அவரது பெயரில் பள்ளேகலை மைதானத்தை பெயரிட மத்திய மாகாண சபை தீர்மானம் எடுத்த போதும் அதனை நடைமுறைப்படுத்த தடையாக இருந்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி , பொதுபெரமுன ஆகிய கட்சி கார்ர்களுடன் இணைந்தே கொட்டாவை சமாதான தூதுவராக்க காட்ட முற்படுகின்றார். கிரிக்கட் வீரராக அர்ஜுன, ஹசஈன் திலக்கரத்ன இன்றும் உள்ளனர். ஆனால் மகிந்தவை நம்பி அரசியலுக்கு வந்த சனத் ஜயசூரிய எங்கே?. இன்றும் அரசியலில் அவர். காணாமல் போயுள்ளார். அதே நிலைமைதான் முரளிக்கும் வரும். முரளியின் தூஸ்ர கிரிக்கெட்டுக்கு சரி. எங்களை முட்டாள் எனக்கூறிக்கொண்டு தோட்டத் தொழிலாளர்கள் அரசியல் தூஸ்ர பந்து வீச வந்தால் என்னுடன் பகிரங்கமாக விவாதத்துக்கு வருமாறு அழைக்கிறேன். வந்தால் நான் வீசும் அரசியல் தூஸ்ராவில் அவரது மூன்று விக்கட்டும் ஒரே பந்தில் விழும்.
மறுபுறமாக காட்டிக் கொடுப்புக்கு பேர்போன இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த முறை தோட்டத் தொழிலாளர்களுக்கான தீபாவளி முற்பணத்துக்கு ஆப்பு வைக்கப் பார்க்கிறார்கள். அதற்கு சகுனி வேலை பார்த்தவர்கள் அப்பன், பிள்ளை, மாமன் , மருமகன் என மாறி மாறி நாங்கள் கேட்காத ஒத்துழைப்பைத் தருகிறோம் என உபத்திரவம் கொடுத்துள்ளார்கள். அதனை தாங்கள் தேர்தல் ஆணையகத்துக்கு சொன்னவர்கள் இ.தொ.கா தான் என்பதற்கு ஆதாரம் உண்டா என என்னிடம் கேட்கிறார்கள். பெட்டிசன் போடும் நீங்கள் எப்படி பேரை போட்டு அனுப்புவார்கள். ஆனால், எமது அமைச்சரின் தீபாவளி முற்பண அறிவிப்பை முந்திக்கொண்டு வந்து ஒத்துழைப்பு தருகிறோம் என பாய்த்த போதே தெரியாதா நீங்கள் தான் அதனை செய்தீர்கள் என்பதை. ஆனால் நான் பெட்டிசன் போட மாட்டேன். என் பெயரிலேயே தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். நல்லாட்சி அரசாங்கத்தை விமர்சிக்கும் இதே செந்தில் தொண்டமான் தான் மாகாண சபை உறுப்பினராக , ஊவா மாகாண அமைச்சராக அல்லாமல் நல்லாட்சி அரசாங்கத்தின் நிதியில் பாதுகாப்பு அதிகாரிகளை பயன்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்கிறார் என்பதை ஆதாரத்துடன் கூறி உள்ளேன். அதனை ஊடகங்களுக்கும் வழங்கவுள்ளேன். அதற்கு பதில் சொல்லிக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தார்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -