நாகாநந்த கொடிதுவக்குவின் இலங்கை குடியரசின் மக்கள் அங்கீகரித்த குடியரசின் உத்தேச அரசியலமைப்பு


ஒரு சட்டத்தின் கீழ் பலம் பொருந்திய
ஒரே நாடு, ஒரே தொனிப்பொருளை நோக்கி......

கடந்து போன கசப்பான 71 வருடங்களை நிறைவு செய்து
தாய் நாட்டினை நிச்சயமாக மாற்றத்திற்குள்ளாக்கும்
புதிய ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பு

திருத்தம் செய்யப்பட்ட 4 ஆம் பதிப்பு
வெளிப்படை மன்றம்
நாகாநந்த கொடிதுவக்கு

முகவுரை
சட்டம் ஒன்று நடைமுறைக்கு வராத நாட்டில் மக்கள் பிரதிநிதிகள் நாட்டை சூரையாடுகையில், ஊழல் மோசடிகளில் ஈடுப்படுகையில் எம்மால் ,னியும் கோழைகள் போன்று பார்த்துக் கொண்டு ,ருக்க ,யலாதுள்ளது.
70 வருடங்களாக நாம் அநேக விதமான  துயரங்களை அனுபவித்தது எங்கள் தவறுகளினால் அல்ல, எமது உறுப்பினர்களாக எம்மால் நியமிக்கப்பட்டவர்கள் எம்மை ,ரக்கம்மற்ற விதத்தில் காட்டிக் கொடுத்து எம்மை வஞ்சித்து தாய் நாட்டினை சூரையாடியமையினால் ஆகும்.
அவர்கள் அரச நிர்வாகம் தொடர்பான பிரதானமான ஆவணமான அரசியலமைப்பு சட்டத்தினை தயார் செய்து நீதிமன்றங்களின் சுதந்திரத்தினை முடக்கி சட்டத்தின் பாதுகாப்புடன் சுதந்திரமாக சூரையாடுகின்றார்கள்.
நாம் பெயரளவில் மாத்திரமே குடியரசின் அரசுரிமைகளை அதிகாரங்களை கொண்டவர்களாகின்றோம். ஏனைய சோசலிச குடியரசு நாடுகளை  பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளில் காண முடியாத வகையில், எமது பிரதிநிதிகள் அவர்களின் பாதுகாப்புக்காக அங்கீகரித்துக் கொண்ட அரசியலமைப்பு சட்டத்தின் (35 ஆம் அரசியலமைப்பு) ஊடாக, குடியரசின் தலைவரினால் நிகழ்த்தப்பட்ட பாரதூரமான குடியியல் மோசடிகளில் ,ருந்து அவர்களை பாதுகாத்துக் கொண்டார்கள்.
எமக்கு காணப்பட்ட ஒரே அதிகாரம் எமது வாக்களிக்கும் அதிகாரம் மாத்திரமே. எமது நம்பிக்கையை உடைத்தவர்களை, எமக்குள்ள அந்த ஒரேஒரு அதிகாரத்தை பயன்படுத்தி  துரத்தியடிப்பதற்கு தேர்தல் மூலமாக நாம் செயற்படுத்திக்காட்டியும், அதனையும் செயல் இழக்க செய்து எம்மால் நிராகரிக்கப்பட்டவர்கள் எம்மை கேலி செய்யும் முகமாக மானத்தைஇழந்தாகிலும் பாராளுமன்றத்தின் பின்புற வழியாகவேனும் நுழைந்து கொள்வதற்கான ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பினை தயார் செய்து கொண்டுள்ளார்கள். நாட்டின் அதியுயர் சட்டமாக ,வர்களினால் அங்கீகரித்துக் கொண்டுள்ள அரசியலமைப்பு சட்டத்தில் (99 (அ) அரசியலமைப்பு) மூலமாக எமது உச்ச அதிகாரத்தின் பலமானது வெளியரங்கமாக வஞ்சிக்கப்பட்டுள்ளது. எமது இறைமையின் பலத்தினை குறைத்து எமது பிரதிநிதிகளாக சாட்சி அளித்தவர்கள் அவர்களை பாதுகாத்துக்கொள்வதற்காக உருவாக்கிக் கொண்ட மற்றும் எம்மை கைவிட்ட அரசியல் அமைப்பானது ,ன்று அந்த அளவிற்கு அருவெறுப்பை ஏற்படுத்திய ஓர் ஆவணமாக அமைகின்றது.
எமக்கு நியாயம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கஇயலுவது நீதிமன்றங்களில் மாத்திரமே எனினும், நீதித்துறையின் அதிகாரங்களை பலப்படுத்தும் பொறுப்பினை கொண்டுள்ள நீதிமன்றங்களுக்கு (105 ஆம் அரசியலமைப்பு) பாரதூரமான மோசடிகளை இழைக்கும் நிறைவேற்று மற்றும
சட்டவாக்க பூர்வமான பதவியில் உள்ளவர்களை எவ்வகையிலும் எதனையும் செய்ய முடியாத நிலமையினை ஏற்படுத்தியுள்ளனர். நிறைவேற்று மற்றும் சட்டவாக்க அதிகாரங்களை ஏற்றுக் கொண்டுள்ள குற்றவாளிகள் தொடர்பாக நியமிக்கப்பட்ட நீதிமன்றங்கள்இன்று பெயரளவில் மாத்திரம் செயற்படும் நிறுவனங்களாக காணப்படுகின்றன.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட மற்றும் சட்டவாக்கபூர்வமான அதிகாரத்தை பகிரங்கமாக தவறான வழியில் பிரயோகிப்பவர்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் அதிகாரத்தை நடைமுறைப்படுத்திக்கொள்ள முடியாத பின் தள்ளப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. இது வரைக்கும் எமது குடியரசின், எமது இறைமையின் பலமாக உள்ள எங்கள் நீதிமன்ற அதிகாரங்களை நிறைவேற்றுவதற்கு நியமிக்கப்பட்டுள்ள நீதவான்கள் ( உயர் நீதியரசர் முதற்கொண்டு) எமது நிறைவேற்று அதிகாரத்தினையும் மற்றும் சட்டவாக்க அதிகாரத்தினையும் பகிரங்கமாக வஞ்சித்து, தாய் நாட்டை சூரையாடுபவர்களுக்கு எதிராக கொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளை விசாரணை செய்யாமல் மற்றும் விலகிச் சென்று எம்மை நிர்கதியாக்குகின்றனர்.
சுதந்திரத்தின் பின் கடந்து வந்த 71 ஆண்டுகளுக்குள் எம்மை அண்மித்த அயல் நாடுகள் எம்மை கடந்து முன்னோக்கி செல்கையில் நாம் பின் நோக்கி பயணம் செய்துக் கொண்டிருக்கின்றோம். நாட்டின் பொருளாதாரம்  இன்று வீழ்ச்சி கண்டுவிட்டது. ,ந்தியா மற்றும் ஏனைய வெளிநாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது ரூபாயின் மதிப்பு அடிமட்டத்தில் உள்ளது.
நாம் ,த்துயரத்தினை மேலும் சகித்துக் கொள்ள வேண்டுமா? ,ல்லையேல் எமது ,றைமையை துணிவுடன் செயற்படுத்தி ,த்துயர நிலையில் ,ருந்து எம்மை மீட்டெடுக்க துணிகரமான மற்றும் வீரத்தனமான படிமுறைகளை எடுக்க வேண்டுமா?
அதேபோன்று, ,வ்யுகத்தின் தேவைகள் என்ன? மோசடி, ஊழல் போன்ற விடயங்களை அடியோடு ஒழித்துக்கட்டக்கூடிய எமது ,றைமையை பலப்படுத்தும், நீதியின் அதிகாரத்தை முறையாக செயற்படுத்தும் எம்மால் அங்கீகரிக்கப்படுகின்ற புதிய ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பின் மீது நம்பிக்கை வைப்பது மாத்திரமேயாகும். நாட்டை பாதுகாக்கும் செயல்முறை வேறு ஏதும் அன்று பாலைவனத்தை நோக்கி பயணிக்கும் ,லங்கை அன்னையை பசுமை மிகுந்த பூமிக்கு பரிபூணமாக திருப்பக்கூடிய முறையாக அமைகின்றன. (System Change) எனலாம்
நாகாநந்த கொடிதுவக்கு
மனித உரிமை தொடர்பான சட்டத்தரணி
தலைவர், வெளிப்படை மன்றம்

அறிமுகவுரை

குடியரசின் இறைமையே எமது ஒரே அவா என
இலங்கையர்கள் என்ற ரீதியில் ஐக்கியத்துடன், ஒரே எண்ணத்துடன்
ஒரே நாடு, ஒரே தொனிப்பொருள், ஒரே சட்டம் எனும் 
கொள்கையின் கீழ் கட்டி எழுப்பப்பட்ட அபிலாஷைகளை தத்ரூபமாக்கும் எமது இறைமைக்குள்ள அதிகாரங்கள்,
நீதியின் ஆதிக்கம், மற்றும் நீதிமன்றங்களின் சுதந்திரம் எனும்
வார்த்தைகளுக்கு அர்த்தம் கொடுக்கக்கூடிய வகையில் உருவாக்கப்படுகின்ற
இலங்கை குடியரசின் மக்கள் அங்கீகரித்த அரசியலமைப்பு சட்டத்தினை
நாம் ,வ்வாறு பெருமையுடனும் கௌரவத்துடனும் ஏற்றுக்கொண்டு அங்கீகரிப்போம்.''


பொருளடக்கம்

குடியரசின் ,றைமை அதிகாரம் கொண்ட குடிமக்களும் 
குடியரசும்                                        

மக்கள் அங்கீகரித்த குடியரசின் அரசியலமைப்பின் இடைக்கால விதிமுறை ஏற்பாடுகள்

சட்டவாக்கம்

நிறைவேற்று அதிகாரம்

நீதிமன்றம்

அரச கொள்கையினை நடைமுறைப்படுத்தும் கொள்கைகள்
வாக்களிக்கும் அதிகாரம் மற்றும் தேர்தல்கள்

அடிப்படை மனித உரிமைகள்

கணக்காய்வாளர் நாயகம்

இலங்கை குடியரசின் அரசியலமைப்பு சட்டம்
1 ஆவது அத்தியாயம்
குடியரசின் ,றைமை அதிகாரம் கொண்ட குடிமக்களும் குடியரசும்
1.ஐக்கிய, தன்னாட்சி அரசாங்கமான ,லங்கை, ,லங்கை குடியரசு என அறிமுகம் செய்யப்படுகின்றது.

2.இலங்கை குடியரசின் ,றைமையானது, குடியரசின் உச்ச அதிகாரத்தினை கொண்ட மக்களின் வசமே காணப்படுகின்றது. மக்களின் ,றைமையை பாதுகாக்கும் அதிகாரத்திற்கு சட்டவாக்க அதிகாரம், நிறைவேற்று அதிகாரம், அடிப்படை உரிமைகள் மற்றும் தேர்தல் அதிகாரங்கள் உள்ளடக்கப்படுகின்றன.

3.குடியரசின் உச்ச அதிகாரங்களை கொண்ட மக்களின் சட்டவாக்க அதிகாரங்கள், நீதிமன்ற அதிகாரங்கள், மற்றும் தேர்தல் அதிகாரங்கள் போன்றன கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ,டம்பெறும். 

(அ)மக்களின் சட்டவாக்க அதிகாரம் மக்களின் மூலமாக மற்றும் மக்களின் பிரதிநிதிகளினால் உள்ளடக்கப்பட்ட பாராளுமன்றத்தின் மூலமாக செயற்படும்.

(ஆஅரச பாதுகாப்பு மற்றும் மக்களின் நிறைவேற்று அதிகாரம் பிரதமர் உட்பட அமைச்சரவையினால் செயற்படுத்தப்படும்.

(இ) மக்களின் நீதிமன்ற அதிகாரம், மக்களின் நீதிமன்ற அதிகாரத்தினை பலப்படுத்தும் வகையில் செயற்படும் நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்படும்.

(ஈ) குடியரசின் உச்ச அதிகாரம் கொண்ட மக்களின் அடிப்படை உரிமைகளை ஏற்று அதற்கு மதிப்பளிக்கும் வகையிலும் பாதுகாக்கும் வகையிலும், அபிவிருத்தியடையும் வகையிலும் மக்களின் நிறைவேற்று அதிகாரத்தை நிறைவேற்றும் அனைத்து நிர்வாக அமைப்புக்களும் மற்றும் மக்களின் நீதிமன்ற அதிகாரத்தை பலப்படுத்தும் அனைத்து தீர்ப்பு வழங்கும் அதிகார சபைகளும் ,தற்கு கடமைப்பட்டுள்ளன.
(உ)வாக்காளர் பெயர்ப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து 18 வயதை அடைந்து உள்ள பிரஜைகளிற்கும் குடியரசின் மக்களுக்குள்ள தேர்தல் அதிகாரத்தினை செயல்படுத்த முடியும்.

4.இலங்கை குடியரசு முதலாம் அட்டவணையில் கூறப்பட்டுள்ள ,ருபத்தைந்து நிர்வாக மாவட்டங்கள் கொண்ட  நீரினால் சூழப்பட்ட தேசமாகும்.

5.இலங்கை குடியரசின் தேசிய கொடி 2 ஆம் அட்டவணையில்; குறிப்பிடப்பட்டுள்ளவாறு  அமைகின்றது.

01

6.இலங்கை குடியரசின் தேசிய கீதம் 3 ஆம் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு  அமைகின்றது.

7.இலங்கையின் தேசிய தினமானது ,லங்கையின் சுய ஆட்சியை நிலைநாட்டிய தினமான மே மாதம் 22 ஆம் திகதியாகும்.

2 ஆவது அத்தியாயம்
மக்கள் அங்கீகரித்த குடியரசின் அரசியலமைப்பில் ,டைக்கால 
விதிமுறை ஏற்பாடுகள்

1.புதிய மக்கள் அங்கீகரித்த குடியரசின் அரசியலமைப்பு சட்டம் குடியரசின் ,றைமை அதிகாரத்தை கொண்ட மக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்படாத வாக்குகளினால் நியமனம் பெற்ற ஜனாதிபதியின் உறுதிப்படுத்தலின் மூலம் புதிய குடியரசின் அரசியலமைப்பு சட்டம் நாட்டின்  அதியுயர் சட்டமாக வலுப்பெறுவதோடு அதன் நிமித்தமாக 1978 ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட அரசியலமைப்பு ,த்தோடு ,ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

2.புதிய மக்கள் அங்கீகரித்த குடியரசின் அரசியலமைப்பு சட்டம் அங்கீகரிக்கப்பட்டதன் பேரில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி ஒழிக்கப்படுகிறது. மேலும் ,றைமை அதிகாரம் கொண்ட மக்களினால் அங்கீகரிக்கப்பட்ட புதிய மக்கள் அங்கீகரித்த குடியரசின் அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமராக ,தற்கு அடுத்து நியமிக்கப்படவுள்ள பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் வரை பதவியில் ,ருப்பார்.

3.இதுவரை செயற்பட்டு வந்த பாராளுமன்றம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கலைக்கப்படுவதோடு பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் புதிய மக்கள் அங்கீகரித்த குடியரசின் அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு ஏற்ப நடைபெறும்.

4. 22 நபர்கள் அடங்கிய அரசு நிர்வாகம் தொடர்பான ஆலோசனை சபையின் பெயர் மற்றும் பத்து பேரை உள்ளடக்கிய சட்டவாக்க சபைக்காக உத்தேசித்த 20 நபர்களின் பெயர்கள் அடங்கிய குழாமினை மக்களின் அனுமதிக்காக அறிவிக்கப்படும்.

5.புதிய மக்கள் அங்கீகரித்த குடியரசின் அரசியலமைப்பு மக்களினால் அனுமதிக்கப்பட்டதும் கலைந்து சென்ற முன்னால் பாராளுமன்றம், பாராளுமன்ற தேர்தலின் பின் மீண்டும் நியமிக்கப்படும் வரைக்கும் மேற்கூறப்பட்ட ஆலோசனை சபை அரச நிர்வாகம் தொடர்பாக பிரதமரின் அந்தந்த விடயத்திற்கான ஆலோசனை சபையாக செயற்படும்.
02
6.அரசியலமைப்பு சபையானது உயர்நீதிமன்றத்தின் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளின் பதவிகளும், அரசியலமைப்பு சபையின் அனுமதியுடன் நியமிக்கப்பட்ட ஏனைய சட்டவாக்க பதவிகளும், வெறும் தகுதிகள் உள்ளவர்களை மாத்திரம் மீண்டும் பொருத்தமானவர்களை நியமிக்கின்றதன் அடிப்படையில் உடனடியாக ஒழித்தல்.

7.புதிய மக்கள் அங்கீகரித்த குடியரசின் அரசியலமைப்பு சட்டம் நாட்டின் அதியுயர் சட்டமாக காணப்படுகின்றதை முன்னிட்டு கலைந்து போகும் உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினை மீண்டும் நியமிப்பதற்காக பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை உள்ளடக்கிய குழாமின் விபரத்தினை மக்கள் அறிந்து கொள்ளும் முகமாக அறிவிக்கப்படும்.

8.பிரதமர் மற்றும் ஆலோசனை சபையின் மூலம் பிரேரிக்கப்பட்ட புதிய சட்டவாக்க சபையின் அனுமதியின் பெயரில் நீதிபதிகளின் புதிய உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தைக் கொண்டிருக்கும்.

9.புதிய மக்கள் அங்கீகரித்த குடியரசின் அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் நியமனம் பெற்ற உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் சத்தியப்பிரமாணம் வழங்கும் செயற்பாடு மக்களின் முன்னால் நடைபெறும். முதலாவதாக உயர்நீதியரசரின் சத்தியபிரமாணம் நடைபெற்றதன் பின் ஏனைய நீதிபதிகளின் உறுதிமொழி உயர்நீதியரசரின் முன்னால் நடைபெறும்.

10.புதிய மக்கள் அங்கீகரித்த குடியரசின் அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் அனைத்து  சட்டங்களும் செல்லுபடியற்றதாகின்றது. குடியரசின் சாதாரண சட்டம் அனைத்து ',லங்கையர்களுக்கும்' பொதுவான சட்டமாக ஏற்புடையதாகின்றது.

11.அனைத்து தனிப்பட்ட சட்டங்களும் செல்லுபடியற்றதாகின்றது.

3 ஆவது அத்தியாயம்

சட்டவாக்கம்

1.குடியரசின் பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 80 ஆக    கட்டுப்படுத்தப்படுகின்றது.

2.பாராளுமன்ற தேர்தல்கள் தேர்தல் தொகுதி அடிப்படையில் நடைபெறுவதோடு பெறப்பட்ட அதிக வாக்குளின் அடிப்படையில் வெற்றிப்பெற்ற போட்டியாளர்களுக்கு உறுப்பினர் பதவி வழங்க தீர்மானம் மேற்கொள்ளப்படும்.

3.பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ,ரண்டிற்கு மேற்பட்ட தடவைகள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியாது.

4.அரசுடன் தொடர்புடைய எந்தவிதமான வியாபார நடவடிக்கைகளுடனும் அவர் அல்லது அவரின் குடும்பத்தினர் சம்பந்தப்படுதல் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தகுதியை ,ழந்ததாக கருதப்படும்.

03
5.பாராளுமன்ற தேர்தலுக்கு போட்டியிடுவதற்கு நன்நடத்தை நபராகவோ ஏற்றுக்கொள்ளப்பட்ட பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாகவோ அல்லது அதற்கு சமமான தகமையினை பெற்றுள்ள நபராகவோ காணப்பட வேண்டும் என்பது மிக அவசியமான தகுதியாக கருதப்படுகிறது.

6.பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கையளிக்கப்படும் ஒரே ஒரு கடமை மற்றும் செயற்பாடாக அமைவது அரசியலமைப்பு நடவடிக்கைகளுக்கு பங்குகொள்வதில் மாத்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது. வேறு நிர்வாக செயற்பாடுகள் தொடர்பான அதிகாரம் மற்றும் வேறு அதிகாரங்கள் எவையும் பாராளுமன்ற உறுப்பினரை சாராது.

7.பாராளுமன்ற உறுப்பினர் அவர் நியமனம் பெற்ற தேர்தல் தொகுதியில் வாக்களித்தவர்களை காட்டிக்கொடுத்து அல்லது வேறு கட்சியுடன் அமர்ந்தார் எனில், அக்கனமே அவரின் உறுப்புரிமை ,ரத்து செய்யப்படும். எனினும், எவரேனும் உறுப்பினர் ஒருவருக்கு தனது மனசாட்யின் படி சுநந்திரமான முறையில் அதனை மதித்து தான் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சியின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ சுதந்திரம் உண்டெனவும் எனவே தனது கருத்தினை தனது வாக்கினால் கட்சிக்கு பக்கசார்பாகவோ அல்லது பக்கசார்பற்ற விதத்திலோ பாவிக்க உரிமை உண்டு.

8.மக்கள் அங்கீகரித்த குடியரசின் அரசியலமைப்பு சட்டத்தினை ஆராய்ந்து பார்ப்பதற்கோ திருத்தியமைக்கவோ பாராளுமன்றத்திற்கு அதிகாரம் ,ல்லை. அதற்காக பாராளுமன்றத்திற்கு வருகை தராத உறுப்பினர்கள் அடங்கலாக 2ஃ3 வாக்கெடுப்பும் மற்றும் மக்கள் கருத்துக்கணிப்பின் படி மக்களிடம் பெற்றுக்கொண்ட மக்களின் கருத்துக்கும் முக்கியதுவம் கொடுக்கப்படுகின்றது.

9.அரசியலமைப்பு சட்டத்தினையும் மற்றும் நாட்டின் சட்டத்தினையும் ஏற்றுக்கொண்டு உண்மையாக தனது நடவடிக்கைகளையும் அலுவல்களையும் புரிய கடப்பட்டுள்ள பொதுமக்களின் வாக்குகளினால் நியமனம் பெற்ற உறுப்பினர் முறைக்கேடான நடத்தையில் ஈடுபடல் உறுப்புரிமை ,ழக்கப்படுகின்ற தண்டனைக்கு உள்ளாவர். உறுப்புரிமையை ,ரத்து செய்யும் நடவடிக்கைகள் அரசியலமைப்பில் விளக்கமாக உள்ளடக்கப்பட்டுள்ளன.

10. எவரெனும் நபர் ஒருவர் ,லங்கையின் பாராளுமன்ற பதவியினை வகிக்கும் சந்தர்ப்பத்தில், அவரினால் தனிப்பட்ட ரீதியாக அல்லது பதவி ரீதியாக ஆற்றப்பட்ட அல்லது செய்யாமல் விடப்பட்ட ஏதேனும் விடயம் தொடர்பாக ஆற்றிய குற்றம் அல்லது குடியியல் தவறு தொடர்பாக அவர் தனிப்பட்ட ரீதியில் பொறுப்பு கூற வேண்டியுள்ளார் எனவும், அரச சொத்துக்களை சூறையாடல் அல்லது மோசடி குற்றத்தில் ஈடுபடுவதற்கான தண்டனை மரண தண்டனையாக அமையும்.

11. மோசடி குற்றத்திற்காக  உறுப்பினர் ஒருவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் உறுப்பினர் நடைமுறைக்கு வரும் வகையில் சேவை ,டைநிறுத்தம் செய்யப்படுவார். வழக்கு விசாரணையின் பின் குற்றங்களில் விடுதலை பெற்று நிரபராதியென தீர்ப்பளிக்கபடின் மாத்திரம் மீண்டும் சேவையில் ,ணைத்துக் கொள்ளப்படுவார்.

12.நீதிமன்றத்தை அவமதிக்க பாராளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்த முடியாது.


04

 4 ஆவது அத்தியாயம்

நிறைவேற்று அதிகாரம்

1.பிரதமர் குடியரசின், நிறைவேற்று மற்றும் அரசாங்கத்தின் பிரதானியானவர் மேலும்  அமைச்சரவையின் உறுப்பினர் ஒருவரும் அமைச்சரவையின் பிரதானியும் ஆவார்.

2.அமைச்சரவையின் உறுப்பினர்கள் 13 பேரை கொண்டதாக அமையும் என்பதோடு அமைச்சுகளின் விடயப்பரப்பு மற்றும் கடமைகள் பிரதமரினால் தீர்மானிக்கப்படும். மேலும், அமைச்சர்களுக்கு கையளிக்கப்படுகின்ற விடயப்பரப்புக்கள் எச்சந்தர்ப்பத்திலும் மாற்றுவதற்கு அல்லது திருத்துவதற்கான அதிகாரத்தினை பிரதமர் கொண்டுள்ளார்.

3.பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் சிபாரிசு செய்யும் ஜனாதிபதியை பிரதமர் நியமிக்க வேண்டும். சட்டவாக்க சபையினால் அனுமதிக்கப்படும் அனைத்து நியமனங்கள் தூதரங்களின் சேவையின் நியமனங்கள் மற்றும் சத்திய பிரமாணம் மேற்கொள்ளல்  பொதுவான அதிகாரம் ஜனாதிபதி முன்னிலையில் ,டம்பெறும்.

4.நீதிமன்றத்தினால் அல்லது வேறு சட்டவாக்க அதிகார சபையின் ஊடாக விதிக்கப்படும் எவ்வாறான தண்டனையையும் குறைப்பதற்கோ ,ரத்து செய்யவோ நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமருக்கோ நிறைவேற்று அதிகாரமற்ற பொதுவான ஜனாதிபதிக்கோ அதிகாரம் கிடையாது.

5.ஊழல் மோசடி தொடர்பான வழக்கொன்று அமைச்சரவையின் உறுப்பினர் ஒருவருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அவரை சேவையில் ,iடைநிறுத்த வேண்டும். வழக்கு விசாரணையின் பின்பு குற்றங்களில் ,ருந்து விடுதலை பெற்று குற்றமற்றவர் என நிருபிக்கப்படின் மாத்திரம் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்.

6.எவரேனும் நபர் ஒருவர்இலங்கை குடியரசின் பிரதமராக அல்லது அமைச்சரவையின் பதவி வகிக்கும் சந்தர்ப்பத்தில் தனிப்பட்ட ரீதியில்  அல்லது உத்தியோக பூர்வ ரீதியாக ஆற்றப்பட்ட அல்லது ஆற்றப்படாத ஏதேனும் விடயம் தொடர்பாக ,ழைத்த மோசடி அல்லது குடியியல்  குற்றத்திற்காக அவர் தனிப்பட்ட ரீதியில் பொறுப்பு கூற வேண்டும். என்பதோடு அரச சொத்தினை சூறையாடல் அல்லது ஊழல் மோசடி குற்றத்திற்கான தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்படல் வேண்டும்.

7.அரச நிதி தொடர்பான பூரணமான அதிகாரங்களை கொண்டுள்ள பாராளுமன்றத்தின் அதிகாரங்களில் சிலவற்றை சட்டத்தின் பிரகாரம் நிதி அமைச்சருக்கு கையளிக்க முடியும். மேலும் ,து தொடர்பாக அனைத்து சந்தர்ப்பங்களிலும் நிதி அமைச்சரினால் தனிப்பட்ட ரீதியில் அவ்வதிகாரத்தினை சரியாக அமுலாக்குதல் கட்டாயமாகும்.

05

  5 ஆவது அத்தியாயம்

நீதிமன்றம்

1.உயர் நிதிமன்றத்தின் மற்றும் மேன்முறையீட்டு நீதி மன்றத்தின் நீதிபதிகள் பிரதமர் மற்றும் அமைச்சரவையினால் பிரேரணை செய்யப்பட்ட சட்டவாக்க சபையின் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளை கொண்டதாக அமையும்.

2.புதிய மக்கள் அங்கீகரித்த குடியரசின் அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தின் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளின் சத்தியப்பிரமாணம் உயர் நீதிமன்றத்தில் உயர் நீதி அரசரின் முன்னால் குடியரசின்இறைமை அதிகாரம் கொண்ட பொது மக்கள் முன் இடம்பெறும்.

3.புதிய மக்கள் அங்கீகரித்த குடியரசின் அரசியலமைப்பு சட்டத்திற்கு ,ணங்குகின்ற அனைத்து சட்டம், பிரத்தியேக சட்டம் மற்றும் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படுகின்ற அனைத்து சட்டங்களையும் செயலிலக்க செய்யும் நீதிமன்ற அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கு உள்ளது.

4.மனித உரிமை மற்றும் குடியுரிமை மற்றும் அரசியல் உரிமை மீறல் தொடர்பாக வழங்கும் பொறுப்பு மூவரைக் கொண்ட உயர் நீதிமன்றத்திற்கு கையளிக்கப்படுகின்றது.

5. நீதி வழக்குகள்

5(1) -உயர் நீதிமன்றம் - அனைத்து குடியியல் குற்றங்கள் மற்றும் ஏனைய வழக்கு தொடரப்பட்ட மேல் முறையீடுகளுக்கும் அவை தொடரப்பட்ட திகதியில் ,ருந்து 6 மாத காலப்பகுதிக்குள் நீதியினை வழங்க கடமைப்பட்டுள்ளது.
5(2) -அனைத்து மேன்முறையீடு மற்றும் ஒழுங்கு விதி, கட்டளை உள்ளடக்கிய தொடரப்பட்ட வழக்கு அது தொடரப்பட்ட தினத்திலிருந்து 6 மாத காலப்பகுதிக்குள் நீதியினை வழங்க கடமைப்பட்டுள்ளது.
5(3) -மேல் நீதிமன்றம் - அனைத்து மனித உரிமை வழக்குகள், குடியியல் மற்றும் மோசடி வழக்குகள் மற்றும் மேன்முறையீட்டுக்காக தொடரப்பட்ட வழக்கும் அவை தொடரப்பட்ட தினத்தில் ,ருந்து 12 மாத காலப்பகுதிக்குள் நீதியினை வழங்க கடமைப்பட்டுள்ளது.
5(4) -மாவட்ட நீதி மன்றம் - அனைத்து வழக்குகள் தொடரப்பட்ட தினத்தில் ,ருந்து 12 மாத காலப்பகுதிக்குள் நீதியினை வழங்க கடமைப்பட்டுள்ளது.
5(5) - நீதவான் நீதிமன்றம் - அனைத்து வழக்குகள் தொடரப்பட்ட தினத்தில் ,ருந்து 12 மாத காலப்பகுதிக்குள் நீதியினை வழங்க கடமைப்பட்டுள்ளது.

06

6.அனைத்து தொடரப்பட்டவழக்குகளுக்குமான நீதியினை வழங்குவது தொடர்பாக சட்டத்தில் விதித்துள்ள வரையறைக்கு உட்பட்டு செயற்படல் கட்டாயமாகின்றது. நீதி மன்றத்தின் பேரில் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை உறுதி செய்வது தவிர்க்க முடியாதொன்றாகும். நீதி வழங்குவதை விரைவாக செயற்படுத்துவது குறிப்பிட்ட
நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளின் பொறுப்பாகும். நீதவான் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் ,ப்பொறுப்பு நீதிமன்ற சேவை நீதிபதி ஆணைக்குழுவின் செயலாளரினது பொறுப்பாகின்றது. சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கால வரையறைக்குள் அந்தந்த வழக்குகளுக்கான நீதியை வழங்குவதற்கு ,யலாமல் போகையில் அது அந்நீதிபதியின் வினைத்திறனற்ற செயலாக கருதி அவரின் பதவியை ,ழக்க செய்வதற்கான காரணமாக ,ச்செயல் அமையும்.

7.நீதிமன்றத்தை அவமதித்தல் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டும், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு எதிராக முன்வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுக்களை விசாரித்தல் குற்றப்பத்திரிக்கை தயார் செய்தல் போன்றனவற்றை நிறைவேற்றுவதற்காக மூவர் அடங்கிய நெறிப்படுத்துகை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டு அதன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படும்.

8. உயர் நீதிமன்றத்தின் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகள் எவரேனும் சேவையில் ,ருந்து ,ளைப்பாரியபின்னர் அரச துறையில் அல்லது தனியார் துறையில் எவ்வாறான தொழிலையும் ஆற்றுவதற்கு தடை.

9. நீதித்துறையில் அனைத்து நீதிபதிகளினதும் பதவி உயர்வு வினைத்திறன் மற்றும் சிரேஷ்டத்துவத்தை மாத்திரம் அடிப்படையாக கொண்டு வழங்கப்படும். நீதித்துறையின் அனைத்து நியமனங்களும் மற்றும் பதவி உயர்வுகள் நீதித்துறை சேவையின் வரையறைக்குள் மாத்திரம் அடங்கும்.

10. நீதி வழங்குவதந்காக நீதிமன்றத்திற்குள்ள காலம் வேறு எந்த விடயத்திற்கும் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

11. நீதி வழங்குவதனை துரிதப்படுத்துவதற்காக வழக்குகளை முறையாக முகாமை செய்யக்கூடிய நிர்வாக திட்டம் (ஊயளந ஆயயெபநஅநவெ ளுலளவநஅ ) அறிமுகப்படுத்தப்படும். மு.ப 9.30 மணிமுதல் பி.ப 12.30 மணி வரை முதலாம் அமர்வும் பி.ப 1.30 மணிமுதல் பி.ப 4.00 மணி வரை ,ரண்டாம் அமர்வும் என்ற அடிப்படையில் நீதி வழங்கும் காலம் நீடிக்கப்படுகின்றது.

12.நீதிமன்றத்தால் கைப்பற்றும் சொத்து ஒரு மாத காலப்பகுதிக்குள் விடுவித்தல் அல்லது வேறு விதமாக அகற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ,வ்விதி முறையை மீறுகின்ற நீதிபதி வினைத்திறன் அற்ற காரணத்திற்காக நீதிமன்ற சேவையில் ,ருந்து நீக்குதலுக்கள்ளாகுவார்.

13.தற்போது உயர் நீதிமன்றத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் சட்டத்திற்கு முரணாக விடுமுறை செயற்பாடு முழுவதுமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.
                           
 07

14.உயர் நீதிமன்றத்தின் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகள் குழாம் தேவையினை கருத்தில் கொண்டு அடிப்படையில் இருத்து வரிசைக்கிரமமாக 21 ஆக உயர்த்தப்படுகிறது.

15.வழக்கறிஞர் சேவை தொடர்பான முறைப்பாடு விசாரணை செய்யப்பட்டு சேவை நாடுவோருக்கு ஏற்பட்ட நீதி நட்டம் / இழப்பு போன்றவற்றிற்கு உடனடி தீர்ப்பு 
வழங்குவதற்காக  அதன் நிமித்தமாகவே வேறான நெறிப்படுத்தும் அதிகார சபை ஒன்று நிறுவப்படும். (Legal Complaints Commission)

16.வழக்கறிஞர் சேவையை நெறிப்படுத்த அதற்கான ஒதுக்கப்பட்ட நெறிப்படுத்துகை அதிகார சபைக்கு பொறுப்புகள் கையளிக்கப்படும்.

6 ஆவது அத்தியாயம்

அரச கொள்கையினை நடைமுறைப்படுத்தும் கொள்கைகள்

1. அனைத்து பிரஜைகளும் ,லங்கையர் என மாத்திரம் ஏற்றுக் கொள்ளப்படுவர். பிறப்பு சான்றிதழ் முதற்கொண்டு அரசின் எவ்வாறான ஆவணத்திலும் ,னம், சமயம் குறிப்பிடப்பட்டிருக்காது. உறுதி மொழி உள்ளடங்களாக எந்த ஆவணத்திலும் தனது ,னம், மதத்தினை  வெளியிட்டுள்ளதை நிராகரிக்க பிரஜைகளுக்கு உள்ள உரிமையை குடியரசு மதிக்கிறது.

2. இனியும், மதம், ,னம், ஜாதி மற்றும் அரசியல் அபிப்பிராயம் என்பவற்றை கொண்டு குடியரசின் பிரஜைகளை வேறாக்கி காட்டுவதற்கு எவ்வித காரணங்களும் காணப்படலாகாது. அனைத்து ,னங்களுக்கிடையில் சுதந்திரம், சமத்துவம், சுய கௌரவம், மற்றும் சுய மதிப்பினையும் உறுதி செய்ய குடியரசு கடமைப்பட்டுள்ளது.

3.இலங்கை நாடு பௌத்த தர்மத்தை அடிப்படையாக கொண்டு ஆட்சி புரியும் நாடாகும். குடியரசின் அரசு கொள்கை எல்லா சந்தர்ப்பங்களிலும் அரசு தர்மத்தில் காணப்படும் பத்து கட்டளைகளை ஆசானாக கொண்டே அமைகின்றது. மேலும் அனைத்து இலங்கையர்களும் இன்னொருவருக்கு வன்முறை செய்யாத வகையில் தான் ஏற்றுக் கொண்ட நம்பிக்கையை, சமயத்தை வழிபட உள்ள சுதந்திரத்தினை குடியரசு ஏற்றுக் கொள்கின்றது. அனைத்து ,லங்கையர்களும் அவர்களின் கலாசாரம் மற்றும் சமயத்திறனை கௌரவிப்பதில் உள்ள முக்கியத்துவத்தை குடியரசு வலியுறுத்துகின்றது. அபிமானத்திற்குரிய லங்கையை சேர்ந்தவர்கள் என்ற ரீதியில் ஒன்றுப்பட்டு எழுந்து தேசிய ஒருமைப்பாட்டினையும் நாட்டின் பெறுமையினையும் சுட்டிக்காட்டும் விதத்தில் அனைத்து உயிரினங்கள் மீதும் பரிவு, இரக்கம், இடையூரின்றி மற்றும் நடுநிலை எண்ணமாக கொண்ட சமூகத்தை கட்டியெழுப்ப, தவறிலைக்காத, புலனடக்கம், ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளை வணங்கி ஒழுகும் பிரஜைகள் உருவாக வேண்டும் என்பதனை குடியரசு வலியுத்துகிறது.

08                                 

4.குடியரசு அனைத்து பிரஜைகளிடம் மக்களுக்குறித்தான பொதுவுடைமைகள் மற்றும் வளங்கள் போன்றவற்றையும் உள்ளடக்கி இயற்கை வளங்களையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மற்றும் அரசு வருமானத்தை
வீண்விரயம் செய்வதற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள மனசாட்சிக்கு நேர்மையான முறையில் செயற்படுவதற்கு கடமைப்பட்டுள்ளது.

5.அனைத்து பிரஜைகளுக்கும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளை கற்பதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டியது குடியரசின் பொறுப்பாகும்.

6. சட்டம், அடிப்படை மனித உரிமை மற்றும் எவராலும் புரிந்து கொள்ள முடியாத மக்களின் இறைமை மற்றும் கலாசார மரபுரிமைகள், என்பனவற்றை பின்பற்றுவதற்கும் கற்பதற்கும் குடியரசானது மக்களை ஊக்கப்படுத்துகிறது.

7. மேலும் குடியரசு தனது சமூக பொறுப்புக்களை ஏற்று, சிறுவர் துஷ்பிரயாகம்  மற்றும் அவர்களின் உழைப்பை சுரண்டுதலுக்கு எதிராக சட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

8. சமூக பொருளாதார சமத்துவமின்மைக்கு எதிராக அதேபோல் வளங்களின் பகிர்வில் காணப்படும் சமத்துவமின்மைக்கு எதிராகவும் நேரடியாக தலையிடுவதற்கு  குடியரச கடமைப்பட்டுள்ளது.

9. அனைத்து பிரஜைகளினதும் சுய கௌரவம் சுய அபிமானத்தை பாதுகாக்கும் பொறுப்பு குடியரசு ஏற்றுகொள்ள வேண்டியதோடு தனித்தன்மைக்கு பங்கம் விளைவிக்கும் ஏழ்மையை துரத்தியடிப்பதற்குமான சமூக நலன்புரி செயல்களை திட்டமிடும் பொறுப்பு சட்டத்தினால் வலுப்படுத்தி ,தனை மேலும் சட்டரீதியாக உறுதிப்படுத்தி பொறுப்புடன் செயற்பட குடியரசு கடமைப்பட்டுள்ளது.

10. குடியரசு ஏற்றுக்கொண்டு கடைபிடிக்க கடமைப்பட்டுள்ள சர்வதேச உடன்படிக்கை தொடர்பான அனைத்து தகவல்களையும் மறைக்காமல் அறிந்து கொள்ள பிரஜைகளுக்கு உள்ள உரிமையை ஏற்றுக் கொண்டு அத்தகவலை வெளியிடுவது குடியரசின் பொறுப்பாகும்.

11. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய, ,றைமைக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய விடயங்கள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு குடியரசுக்கு காணப்படுகிறது. மக்களுக்கு அவ்வாறான ஏதேனும் நடவடிக்கை தொடர்பான தகவலை அறிந்து கொள்வதற்கு உரிமை உண்டென்பதனையும் குடியரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

12. மிருகவதை மற்றும் தவறான பாதையிலிருந்து விலகி செயற்பட மக்களுக்கு ஆர்வம் ஏற்படுத்த வேண்டும். மேலும் அதனை நிலைநாட்டுவதற்கு அவசியமான சட்ட ஏற்பாடுகளை தயார் செய்வதற்கான பொறுப்பு குடியரசுக்கு காணப்படுகிறது.

13. வன மற்றும் மரஞ்செடிகள் தலைமுறையின் பாரம்பரியம் மரபு என்பதனை ஏற்றுக் கொள்கின்ற குடியரசு அதனை பாதுகாக்கும் பொறுப்பை சட்டரீதியான பொறுப்பாக ஏற்றுக் கொண்டுள்ளது.

09
14. குடியரசின் பொதுமக்களைச்சார்ந்த ,யற்கை வளங்கள்   அனுகூலமற்ற நிபந்தனையின் கீழ் விற்பனை மற்றும் வேறு ஏதேனும் விதத்தில் அப்புறப்படுத்தலுக்கு ஏற்படுத்தியுள்ள உடன்படிக்கைகள், iறந்த காலத்தை பாதிக்கும் வகையில் இரத்து செய்யப்படும்.

15. எவ்வாறான சர்வதேச உடன்படிக்கைகளும் குடியரசின் பாராளுமன்றத்தின் 2/3 பகுதியினரின் அதிகாரம் பெற்றுக்கொள்ளாமல் அவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திட முடியாது.

16. பிரஜைகளின் உயிர்களை பாதுகாத்தலினை உறுதி செய்யும் முகமாக சர்வதேச சமூகத்தை ஏற்றுக்கொண்டு நடைமுறை படுத்திய தேசிய உடன்படிக்கைகள் கைச்சாத்திட்ட திகதியிலிருந்து நடைமுறைக்கு வருமாறு ஏற்றுக்கொண்டு அமுல்படுத்தும் பொறுப்பு குடியரசை சாரும்.


7 ஆவது அத்தியாயம்

வாக்களிக்கும் அதிகாரம் மற்றும் தேர்தல்கள்

1.தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து கட்சிகளும் தாம் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய ஜனநாயகத்தினை ஏற்றுக்கொண்டு கௌரவப்படுத்துவதற்கு கடமைப்பட்டுள்ளது. எனவே அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது கட்சிக்கு சட்டங்களை தயார் செய்யும் போது ஜனநாயகத்தின் விழுமியங்களை மதிக்கும் வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும். கட்சிகளின் யாப்பு பிரதிநிதித்துவம், ஜனநாயகத்தினை ஏற்று சட்டவாக்கம் செய்வது கட்டாயமாகும். இப்பொறுப்பினை மீறுகின்ற எந்த அரசியல் கட்சிக்கும் தனது வேட்புமனு தாக்கலை செய்ய முடியாது.

2.அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு முன்வருவதற்கு முன் தங்களின் தேர்தலுக்கான செலவு தலைப்பினை தேர்தல் ஆணையகத்திற்கு தெரியப்படுத்த வேண்டியது அத்தியாவசிய பொறுப்பாகும். அனைத்து வரவு மற்றும் செலவு தொடர்பான பட்டயக்கணக்காய்வாளரின் ஊடாக கணக்காய்வு செய்யப்பட்டு கணக்கரிக்கை ஒன்றினை கணக்காய்வாளர் நாயகத்திற்கு பிரதி ஒன்றுடன் கிடைக்குமாறும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

3. வெளிநாட்டில் வசிக்கும் அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் தனது வாக்குகளை அந்நாட்டின் இலங்கை தூதரங்களுக்கு சமூகம் தந்து வாக்குகளை இடுவதற்கான ஏற்பாடுகளை குடியரசு அறிமுகப்படுத்தும். 

10

4.தேர்தல் ஆணையகத்திற்கு கையளிக்கப்பட்டுள்ள தேர்தல் நெறிப்படுத்தும் பொறுப்பின் ஊடாக மென்மேலும் விரிவாக்கி சுவரொட்டி பாவனை, பொது இடங்களில் அறிவித்தல்களை ஒட்டுதல் முழுவதாக தடை செய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட சொத்துக்களின் எல்லை பரப்பினுல் A4 அளவிற்கு மிஞ்சாத வகையிலான அறிவிப்புகளை வெளியிடுவதற்கு அனுமதியுள்ளது. பொது ,டங்களில் தேர்தல் கூட்டங்கள் நடத்த முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

5.மேலும் பொது மக்களின் சேவைக்காக உள்ள பேருந்துகளை தேர்தல் நடவடிக்கைக்கு பாவிப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

6.தேர்தலுக்கு முன்வரும் வேட்பாளர்கள் மக்களுக்கு வழங்குவதற்காக தயாரிக்கும் தேர்தல் பொறுத்தனைகளில் குறிப்பிடப்பட்ட வேட்பாளரின் பெயர் மற்றும் அவரின் கையொப்பம் இடப்பட்டிருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்களுடன் ஏற்படுத்தும் அவ்வுடன்படிக்கை நீதிமன்றத்தில் முன்வைக்கக்கூடிய ஆவணமாகவும் மக்களுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையாகவும் கருதப்படும்

7. எவ்வகையிலான ஊழல் மோசடி குற்றத்திற்காக வழக்கு தொடரப்பட்ட அல்லது உயர் குற்றச்சாட்டின் நிமித்தமாக வழக்கு தொடரப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர் போட்டியிடும் தகமையினை இழக்கின்றார்.

8.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அல்லது அவரின் குடும்ப அங்கத்தவர்கள் அரசுக்கு தொடர்புள்ள எவ்வகையான விடயத்திலும் ஈடுபட்டிருப்பின் அவ்வேட்பாளருக்கு தேர்தல் ஆணையகத்தினால் நடாத்தப்படும் எவ்வகையான தேர்தலிலும் போட்டியிட முடியாது.

8 ஆவது அத்தியாயம்

அடிப்படை மனித உரிமைகள்


1.தற்போது சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படை உரிமைகளுக்கு மேலதிகமாக கீழ்காணும் உரிமைகள் குடியரசின் மக்களுக்குள்ள அடிப்படை உரிமைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

1.(1)உயிர் வாழ்வதற்குள்ள உரிமை

1.(2)தன்மதிப்பு சுயகௌரவம் என்பதற்கான உரிமை (இவ்வுரிமை சிறைச்சாலைகளில் உள்ள சிறைக்கைதிகளுக்கும் அதே வகையில் உரித்தாகும்).

1.(3) குடும்பமாக வாழ்வதற்கான உரிமை. 

1.(4) கைதுசெய்யப்பட்ட அனைத்து நபர்கள்; தொடர்பாக.

11

1.(4).அ. கைதுசெய்யப்பட்ட அனைத்து நபர்களும் விசாரனை செயற்பாடுகளின் போது 
வழக்கறிஞர் உதவியுடன் முன்னெடுப்பதற்குள்ள உரிமை.

1.(4).ஆ.எவ்வகை குற்றம் புரிந்த ஒருவரை
யும் கைது செய்யும் போது 24 மணித்தியாலங்களுக்கு முன்பதாக நீதவான் நீதிபதி முன்பாக நிறுத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

1.(4).,. எவ்வகை குற்றம் தொடர்பாகவேணும் கைது செய்யப்படும் சந்தேக நபரை சிறைச்சாலையில் ,டுவதற்கு முன்பதாக நீதவான் நீதிபதி அவரை தனிப்பட்ட ரீதியில் விசாரிக்கவும் மற்றும் சந்தேக நபரை சிறைச்சாலையில் இடுவதற்கு முன்பதாக சந்தேக நபர் நீதிபதி முன்னிலையில் ஏதேனும் அறிக்கை செய்ய உள்ளாரா என வினவ வேண்டியது அத்தியாவசியமாகும்.

1.(4).ஈ. விசாரணைக்காக சிறைச்சாலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 14 நாட்களுக்கு மேல் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க முடியாது என்பதோடு அக்காலத்தை அடைவதற்கு முன்பாக வழக்கு தொடரப்படாதவிடத்து உடனடியாக அவர் விடுதலை செய்யப்பட வேண்டும்.

1.(4).உ. எந்த நபருக்கும் தமக்கொதிராக சாட்சி அளிக்கவும் அல்லது குற்றவாளி என்பதை ஏற்றுக்கொள்ளவும் அல்லது குற்றத்தை அறிக்கை செய்யவும் பலவந்தப்படுத்தலுக்கு உள்ளாகாத வண்ணமான உரிமை.

1.(4).ஊ. மூன்று மாதத்திற்குள் வழக்கு தொடரப்பாடாமையினால் விடுதலையடைவதற்கு உள்ள உரிமை.

1.(4).எ. ஒரே குற்றத்திற்காக இரண்டு முறைகள் வழக்கு தொடரப்பட முடியாது என்ற உரிமை.

1.(5) பலவந்தமாக மறைத்து வைக்க முடியாது என்ற உரிமை.

1.(6) கொடூரமான, மனிதாபிமானமற்ற விதத்தில் வதம்; மற்றும் ஒடுக்கு முறைக்கு உற்படுத்தப்படாமைக்கான உரிமை.

1.(7) அனைத்து தொழில் புரியும் பிரஜைகளுக்கும் நீதியின் அடிப்படையில் நியாயமானதை வலியுறுத்தல்.

1.(7).அ. நியாயமான வேதனம் மற்றும் அதற்கு சமமான தொழில் ஒன்றினை பெற்றுக் கொள்ள உரிமை.

1.(7).ஆ. பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான தொழிலில் ஈடுபடுவதற்கான உரிமை.

1.(7).,. தொழில் புரியும் எல்லா மணித்தியாலத்துக்கும் குடியரசில் நியமித்துள்ள கொடுப்பனவை பெற்றுக் கொள்ள உரிமை.

12

1.(7).ஈ. முதுமை மற்றும் திறமை அடிப்படையில் மாத்திரம் பதவி உயர்வினை பெற்றுக் கொள்ளவுள்ள உரிமை.

1.(7).உ. ஓய்வு, வேலை புரியும் மணித்தியாலம், சம்பளம் அடங்கிய விடுமுறை, பெற்றுக் கொள்ள உரிமை.

1.(8) தொழிற்சங்கம் அமைப்பதற்கும் நடத்தி செல்வதற்கும் உள்ள உரிமை.

1.(9) உழைப்பை சூறையாடுதலுக்கு உற்படுத்தபடாமைக்கான உரிமை.

1.(10) சுய கடிதங்கள் தொடர்பாடல் மற்றும் பரிமாற்றல்களில் (இலத்திரனியல் கடித தொடர்பாடல் உற்பட) தனித்தன்மையை மீறமுடியாமைக்கான உரிமை.

1.(11) திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றவர்களுக்கான உரிமை, மற்றும் சம்மதம் இல்லாமல் எவரையும் திருமணத்திற்கு உள்ளாக்க முடியாமைக்கான உரிமை

1.(12) சூழலை பாதுகாக்க அனைவருக்கும் உள்ள உரிமை.

1(13) ,லவசமாக முன்னிலை மற்றும் ,ரண்டாம் நிலை கல்வியை பெற்றுக் கொள்ள உள்ள உரிமை.

1.(14) மூன்றாம் நிலை கல்விக்காக குடியரசின் ஊடாக வழங்கும் வசதிகளை மற்றும் நன்கொடைகளை பெற்றுக் கொள்ள உரிமை.

1.(15) குடியரசினூடாக வழங்கும் முறையான சுகாதார பாதுகாப்பு நிகழ்ச்சி திட்டங்களை மேற்கொள்வதற்கு ,ணங்க கட்டணமற்ற முறையான சுகாதார சேவையினை பெற்றுக் கொள்வதற்கான உரிமை.

1.(16) தேவைக்கேற்ப உணவு, போஷாக்கு, மற்றும் பொருத்தமான தொழில், தொழில் அற்ற சந்தர்ப்பங்களில் அரசியல் அடைக்களத்தினை பெற்றுக் கொள்வதற்கான உரிமை.

1.(17) நாட்டில் காணப்படும் ,யற்கை வளங்களில் ,ருந்து சமமான பிரதிகூலத்தினை பெறும் உரிமை.

1.(18) மூத்த பிரஜைகளுக்கு தனது சுய கௌரவத்துடன் மற்றும் சுய அபிமானத்துடனும் வாழ்வதற்கான உரிமை.

2. இவ்வத்தியாயத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை, நிறைவேற்று நிர்வாக அல்லது நீதிமன்ற நடவடிக்கையினை மீறுதல் மற்றும் மீறுதலுக்கு எத்தனிக்கும் சந்தர்ப்பத்தினை விசாரணை செய்வதற்கான அதிகாரம் தனி மற்றும் தனித்த நீதிமன்ற அதிகாரத்தினை உயர் நீதிமன்றம் கொண்டுள்ளது.

13
3. அவ்வாறான முறைப்பாடு உரிமை மீறப்பட்ட தினத்தில் இருந்து 3 மாதக்காலப்பகுதிக்குள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட வேண்டும். மேலும் மக்கள் நீதிமன்றத்தின் பேரில் வைத்துள்ள நம்பிக்கையினை உறுதி செய்யும் முகமாக 6 மாதத்திற்குள் விசாரணையை மேற்கொண்டு தீர்ப்பினை வழங்க சட்டத்தின் ஊடாக பொறுப்புடையதாகின்றுது.

4. அடிப்படை உரிமை மீறல்தொடர்பாக நீதிமன்றம் விதிக்கும் தண்டப்பணத்தை ஏற்றுக்கொள்ளல் அல்லது தண்டனைக்குறியவர்களினால் தனிப்பட்ட ரீதியில் செலுத்த உத்தரவிடல் அத்தியாவசியமானதாகும்.

 
 9 ஆவது அத்தியாயம்

கணக்காய்வாளர் நாயகம்

1. தற்போது கணக்காய்வதிபதிக்கு உள்ள அதிகாரங்கள் கீழ் கூறப்பட்டுள்ளவாறு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

1.(அ) பிரதமர், அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து செலவுகளும் கணக்காய்வாளரின் மேற்பார்வைக்கு உள்ளடக்கப்படல் வேண்டும்.

1.(ஆ) குடியியல் கணக்காய்வாளரின் அதிகாரங்கள் அரசின் எவ்வாறான கணக்கினையும் எச்சந்தர்ப்பத்திலும் வரையறைகள் இன்றிய மேற்பார்வையின் கீழ் செயற்படுத்தவும் அத்தியாவசியப்படுத்தப்பட வேண்டும்.

1.(,) ஓரு மில்லியன் ரூபாய்க்கு மேற்படுகின்ற அரசின் எந்தவொரு விலைமனு கோரல் சம்பந்தமாக கோரும் சந்தர்ப்பத்திலிருந்து கையளிப்பு வரையிலான செயற்பாடுகள் கணக்காய்வவளர் நாயகத்தின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

1.(ஈ) அபிவிருத்தி வேலைகள் தொடர்பான கட்டுமான பணிகள் ஆரம்பம் முதல் இறுதி வரை கணக்காய்வாளரின் மேற்பார்வையின் கீழ் நடைபெற வேண்டியது அத்தியாவசியமாகின்றது. அரசின் எவ்வாறான கட்டுமாண வேலைத்திட்டங்களும் கையளிப்பதற்கு முன்பதாக எப்போதும் குறிப்பிட்ட வேலைத்திட்டம் தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காப்புறுதி நிறுவனத்தின் ஊடாக 20 வருடத்திற்கான   முறி ஒன்றினை பெற்றுக்கொள்வதின் ஊடாக வேலைத்திட்டம் பாதுகாக்கப்பட்டிருப்பதை கணக்காய்வாளர் நாயகம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

2. கணக்காய்வாளர் நாயகத்திற்கு கையளிக்கப்பட்டுள்ள கடமைகளும் பொறுப்புகளும் நிறைவேற்றப்படுகின்ற சந்தர்ப்பத்தில் எவ்விதத்திலாவது அதனை தடுக்கும்; விதத்தில் விளைவுகள், தடைகள் அல்லது ஆதரவளிப்பதை நிராகரித்தல் அல்லது அசட்டை  செய்தல் போன்றன குற்றமாக கருதப்படும். அவ்வாறு செயற்படும் சந்தேக நபரை

14 

பிடியாணை அற்ற சந்தர்ப்பங்களிலும் கைது செய்யமுடியும் என்ற நிபந்தனைக்கு உட்பட்ட குற்றத்தை புரிந்தவராக கருதப்பட்டு அக்குற்றத்திற்காக 5 வருட சிறைத்தண்டனையும் அனுபவிக்க நேரிடும்.
குடியரசின் எப்பதவியை வகிப்பரும் ,றைமை அதிகாரம் கொண்ட மக்களிடம் முன்வைக்க வேண்டிய உறுதி மொழி


..............................ஆகிய நான் ................................
பதவியின் கடமைகளையும் பொறுப்புக்களையும் குடியரசின் மக்கள் அங்கீகரித்த அரசியலமைப்பு சட்டத்துக்கும் மற்றும் நாட்டின் சட்டத்துக்கும் உடன்பட்டு, திடமாகவும் சட்டத்துக்கு கீழ்படிந்து நம்பிக்கையை பாதுகாக்கும் விதத்திலும் செயற்படுத்த வேண்டிய குடியரசின்இறைமை அதிகாரத்தை கொண்ட மக்களிடம் உள்ள சிறப்புரிமைகளை ஏற்றுக்கொண்டு அதனை மதிப்பதற்கும் குடியரசுக்கு சார்பாக செயற்படுவதாகவும் ,ங்கனம் கௌரவமிக்க அபிமானத்துடன் உறுதியளிக்கிறேன் / உறுதியளிக்கிறோம்.


15


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -