தமிழ்நாட்டு பிக்பாஸில் ஈழத்தமிழர்களுக்கு தொடர்ந்து பாகுபாடு காட்டப்பட்டு வருவதாக வலுவாக ஆதாரங்களுடன் தங்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
கடந்த சூப்பர் சிங்கரிலும் கனடாவை சேர்ந்த ஈழத்தமிழ் சிறுமி ஏமாற்றப்பட்டதாகவும் அதே போல் இம்முறையும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஷனை வேண்டுமென்றே வெளியேற்றியதாகவும் சொல்லப்படுகின்றது.
விஜய் ரிவியின் TRP ஐ ஏத்துவதற்கு ஈழத்தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும் கருவேப்பிலை போல் தேவைப்படுகின்றனர். பின் தேவை முடிய தூக்கியெறியப்படும் அவலமும் தொடர் கதையாக தான் உள்ளது.
இந்நேரம் யாழ்ப்பாணத்தில் பூவன் மீடியாவை சேர்ந்த நண்பர்கள் “யாழ்ப்பாணத்தில் பிக்பாஸ் ஆ?” எனும் தலைப்பிலான பம்பல் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளனர். இங்கு நடக்கும் பிக் பாஸில் யார் யார் பங்கு கொள்ள போகிறார்கள்?
யாழ்ப்பாணத்த்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்தால் எந்த மாதிரியான நபர்கள் எவ்வாறு நடந்து கொள்ளுவார்கள் காணொளி பலரையும் தம்மையறியாமலே சிரிக்க வைக்கின்றது.
தமிழ்நாட்டு பிக்பாஸுக்கு சாட்டையடி கொடுத்திருக்கும் பூவன் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்