சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு விட்ட துறைமுக ஒப்பந்தம் ரத்து..!

லங்கை ஹம்பந்தோட்ட துறைமுகத்தை சீனாவின் தனியார் நிறுவனத்துக்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டில் பிரதமராக இருந்த ரணில் விக்ரசிங்க அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த துறைமுகத்தை போர்க்கப்பல் நிறுத்தும் தளமாக சீனா மாற்றும். இதனால் இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும். எனவே, அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியது. அதை சீனா மறுத்தது.

இந்தியா - ஐரோப்பியா கண்டத்தை இணைக்கும் பாலமாக இத்துறைமுகம் நிகழும். இதன்மூலம் வர்த்தகம் மேம்படும். இலங்கையின் பொருளாதாரம் மேம்படும் என விளக்கம் அளித்தது.

நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக இத்துறைமுகம் சீனாவுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அங்கு இராணுவ தளம் அமைக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் அரசு கூறி வந்தது.

அதனைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்று புதிய ஜனாதிபதி ஹம்பந்தோட்ட துறைமுக குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார்.

தற்போது மீண்டும் ராஜபக்ச குடும்பத்தினரின் ஆட்சி ஏற்பட்ட நிலையில் சீனாவின் ஆதிக்கம் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோத்தபய தனது அணுகுமுறையில் மாற்றம் கொண்டு வந்துள்ளார். அதிபராக பொறுப்பேற்றதும் தனது முதல் வெளிநாட்டு பயணமாக அண்மித்த நாடான இந்தியா சென்றுள்ளதுடன். ஹம்பந்தோட்ட துறைமுக குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படவுள்ள செய்தியையும் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -