கிழக்கு மாகாண ஆளுநராக மொழியறிவு உள்ளவர் நியமிக்கப்பட வேண்டும்-முன்னாள் கல்முனை பிரதேச சபை உறுப்பினர்


பாறுக் ஷிஹான்-
ங்களுடைய கிழக்கு மாகாணத்திற்கு எல்லா மொழிகளையும் பேச கூடிய பொறுப்புவாய்ந்தவரை ஆளுநராக நியமிக்க வேண்டும் என முன்னாள் கல்முனை பிரதேச சபை உறுப்பினரும் ஒய்வு பெற்ற அதிபருமான அப்துல் கபூர் தெரிவித்தார்.
புதிய ஆளுநர்கள் நாடுபூராகவும் நியமிக்கப்படவுள்ள நிலையில் கிழக்கு மாகாண ஆளுநர் எவ்வாறானவர் நியமிக்கப்பட வேண்டும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்

புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் நகர அபிவிருத்தி புதிய திட்டங்களை அமுல்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்தவர்.இவர் பல மாகாணங்களுக்கு முதலமைச்சர்களை தற்போது தெரிவு செய்து நியமித்து வருகின்றார்.எமது கிழக்கு மாகாணத்தில் பௌத்த தமிழ் முஸ்லீம் மக்கள் இன வாழ்கின்றனர்.எல்லா மொழியையும் பேசக்கூடியவர் மற்றும் மக்களுடன் பொறுப்புவாய்ந்த அன்னியோன்னியமாக மக்களுடன் பழகக்கூடியவரே ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.
இதனையே எமது மக்கள் எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர்.கடைசியாக ஆளுநராக இருந்த கலாநிதி கிஸ்புல்லாஹ் அவர்களும் பல அபிவிருத்தி வேலைகளையும் செய்து முடித்துள்ளார்.
பொதுவாக அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களை வழிநடத்தக்கூடிய நேர்மையான நீதியான ஆளுநர் நியமிக்கப்பட வேண்டும் என எல்லா இன மக்களும் விரும்புகின்றார்கள்.
இந்த எதிர்பார்ப்பை எமது ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும்.எல்லோரையும் அரவணைக்கக்கூடியவரை கிழக்கு மாகாணத்திற்கு நியமித்து குறையாக உள்ள அபிவிருத்தி வேலைகள் காணி விடுவிப்பு அரசியல் கைதிகள் விடுவிப்பு உள்ளிட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து செல்பவரை நியமித்தல் அவசியமாகும் என குறிப்பிட்டார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளராக இருந்து 7வது புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோட்டபாய ராஜபக்ஷ சிறந்த நிருவாகி.அவர் கடந்த காலங்களில் பாதுகாப்பு செயலாளராக இருந்த வேளை இந்த நாட்டின் நகர அபிவிருத்திகளை முன்னெடுத்து செய்து காட்டியவர்.எனவே ஆளுநர் தெரிவு விடயத்திலும் புதிய ஜனாதிபதி கிழக்கு மாகாணத்திற்கு நேர்மையான ஆளுநரை தெரிவு செய்வார் என நம்புகின்றேன் என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -