குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையில் ஊழியராக பணி புரியும் மாவடிச்சேனை பள்ளிவாயல் வீதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான எம். புவாத் என்பவர் துவிச்சக்கர வண்டியில் கடமைக்குச் செல்லும் போது வாழைச்சேனை ஐஸ் தொழிற்சாலைக்கு முன்பாக வைத்து வேகமாக வந்த கார் மோதி குறித்த நபர் தூக்கி வீசப்பட்டு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் கழுத்துப் பகுதியில் பலத்த காயங்களுக்குள்ளானவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.