அரச திணைக்களங்களில் பணிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பணிகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்


ரச திணைக்களங்களில் பணிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பணிகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு திறைசேரியின் செயலாளர் சஜித் ஆட்டிக்கலவால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் இன்று பிற்பகல் சகல அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் உள்ளிட்ட திணைக்களங்களின் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள் ஆகியோருக்கும் அரசியலமைப்புப் பேரவைக்கும் DMC / Policy/ Requeriments என்ற கடிதத்தின் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட அனைத்து நியமனங்களும் மீளவும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும்வரை இடைநிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தலின் ஊடாக செயற்திட்ட உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட சுமார் 7 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -