இந்தியாவுக்கான இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ வியத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை, புதுடில்லியில் இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்போது, ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர், வெளிநாட்டுக்கான முதல் விஜயத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டமைக்காக, ஜனாதிபதிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
அயல்நாடு என்ற வகையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் நட்புணர்வு, மேலும் பலப்படுமென்று தெரிவித்த அமைச்சர், இலங்கையில் ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு, இந்திர அரசாங்கம், தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்குமென்றும், அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்ட விபரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி இந்திய மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.