இந்நாட்டு தமிழ்மக்கள் சுமந்த வலிகள் ஏராளம். இழந்தவை இழந்தவைதான். இனிமேல் இணைந்தே வாழ்வோம். எமது கல்முனை வாழ் தமிழ்மக்களின் நீண்டகால அபிலாசையான வடக்கு பிரதேசசெயலகத்தை தரமுயர்த்தித்தருவதான வாக்குறுதியை நிறைவேற்றுவீர்களாக.
இவ்வாறு இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்தஉறுப்பினரும் கல்முனை மாநகரசபை முன்னாள் எதிர்க்கட்சித்தலைவருமான எல்லைக் காவலன் குஞ்சித்தம்பி ஏகாம்பரம் தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவிற்கு வாழ்த்துத் தெரிவித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
முதற்கண் கல்முனைவாழ் தமிழ்மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். தாங்கள் கேரியவண்ணம் நாம் சுமார் 7000வாக்குகளை தங்களுக்கு வழங்கியுள்ளோம். அதற்காக உழைத்த கல்முனை வாழ் தமிழ்சகோதரர்கள் இளைஞர்களுக்கு நன்றியும் கூறுகின்றோம்.
எனவே தங்களின் சகோதரர்கள் மஹிந்தராஜபக்ச பெசில்ராஜபக்ச ஆகியோர் உங்கள் சார்பாக கல்லடியிலும் கல்முனையிலும் கல்முனை பிரதேசசெயலகம் தரமுயர்த்தப்படும் என்ற வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் தருணம் கணிந்துள்ளதாக எண்ணுகிறோம்.
அதனை நிச்சயம் தாங்கள் நிறைவேற்றுவீர்களென்ற பூரண நம்பிக்கை எங்களிடமுள்ளது.தங்களுடன் தொடர்ந்து இணைந்து பயணிக்கவிரும்புகிறோம். என்றார்.