வன்னிநிலப்பிரதேசத்தில் வனவளப்பிரிவின் அத்துமீறல்களை புதிய அரசு கட்டுப்படுத்துமா?வன்னிநாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்


2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி யுத்தம் முடிவுக்கு வந்த பின் வன்னி நிலப்பிரதேசத்து மக்கள் அனைவரும் செட்டிகுளம் அகதி முகாம்களுக்கு கட்டாயமாக இடம் பெயரச் செய்யப்பட்டனர் அதன் பின்னர் 2010ம் ஆண்டளவில் எ ந் த வித அரசியல் யாப்பின் விதிமுறைகளை பின்பற்றாது வனவளப்பிரிவானது எமது தமிழர்களின் பிரதேசங்களை கபளீகரம் செய்தது என்று சொன்னால் அது மிகையாகாது
வனவளப்பிரிவு என்ற போர்வையில் கெழும்பில் இருந்து கொண்டே கூகுள் மூலம் அடையாளமிடப்பட்ட பிரதேசங்கள் அனைத்தும் வர்த்தமாணி அறிவித்தல்கள் மூலம் வனவளப்பிரிவிற்கு உரிய பிரதேசங்களாக அடையாளமிடப்பட்டிருந்தன இப்படியான செயற்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியனவாக இல்லை ஒரு வனவளப்பிரிவு மக்களின் பிரதேசங்களை அடையாம் இடுவதாக இருந்தால் அதற்காக கிராம சேவையாளர் மக்களின் பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் பிரதேச செயலர் நில அளவை திணைக்களம் மக்கள் பிரதிநிதிகள் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும் 2010ம் ஆண்டு செயற்படுத்தப்பட்ட வன்னிப்ரதேசத்தின் வன வளப்பிரிவு அடையாளம் இடப்பட்ட நடவடிக்கையில் பொது மக்களின் அமைப்புக்களோ பிரதேச செயலரோ மக்கள் பிரதிநிதிகளோ அல்லது வனஜீவராசிகள் திணைக்களம் வனவளப்பிரிவு நில அளவை திணைக்களம் ஆகியவை ஒன்றினைந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை

கடந்த ரஜபக்ச அரசில் தான் இந்த கூகுள் 10 மூலம் வன்னி நிலம் வனவளப்பி ரி வால் எல்லை இடப்பட்டது
இன்று அதே வர்த்தமாணி அறிவித்தலை வைத்துக் கொண்டு எமது மக்களின் பிரதேசங்களை கபளீகரம் செய்து வருகிறார்கள் என்பதுதான் வெளிப்படையான உண்மை
எனவே மீண்டும் முன்னைய அரசாங்க புதிதாக ஆட்சி அமைத்து இருக்கின்றது அதே அரசாங்கத்தை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக வந்திருக்கின்றார் மக்களின் இந்த பிரச்சனைக்கு என்ன செய்யப் போகின்றார் என்னும் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது இளைஞர்களின் விளையாட்டு மைதானங்கள் எல்லையோர கிராமங்களில் மக்கள் வசித்த இடங்கள் மக்கள் மயானமாக பாவிக்கப்பட்ட இடங்கள் விவசாயம் செய்த இடங்கள் அதற்காக பயன்படுத்தப்பட்ட குளங்கள் என்பவற்றை களபீகரம் செய்து வன்னிப்பிரதேச மக்களின் அபிவிருத்திகளுக்கு இடையூறு செய்திருக்கின்றார்கள் என்பது மிகவும் கவலைக்குரிய விடயம் இந்த விடயம் கடந்த அரசில் பல தடவை எடுத்துச் சொல்லப்பட்ட பொழுது வர்த்தமாணியில் மாற்றங்கள் செய்வதாக கூறியிருந்தும் அந்த வர்த்தமாணி மாற்றங்களை செய்வதற்கு இந்த அரச அதிகாரிகள் இழுத்தடிப்புச் செய்கிறார்கள் அதற்கு சரியான முடிவை காண முடியவில்லை என்று தற்போது வந்துள்ள புதிய அரசு இதற்கானஅடிப்படைக் காரணம் இந்த வர்த்தமானி அறிவித்தலை கொண்டு வந்தவர்கள் என்ற முறையில் ராஜபக்ச அவர்கள் மீண்டும் அரியணை ஏறி இருக்கின்றார்

அவரே இதற்கான முடிவை காண வேண்டியவராகவும் இருக்கின்றார் இங்கு நாம் கேட்பது வன்னியின் வனவளத்தை அழிப்பது அல்ல வன்னிப்பிரதேசம் மட்டும் தான் இலங்கையில் உள்ள வன வளங்களின் அளவுகளில் முல்லைத்தீவு மன்னார் வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்கள் மட்டும்தான் ஐம்பது வீதத்திற்கு மேட்பட்ட பிரதேசங்களை வனவளங்களாக கொண்டுள்ள மாவட்டங்களாகும் சிங்கள தேசம் எங்கும் இருபத்தைந்து வீதத்திற்கும் குறைந்த அளவு வனவளங்களைத்தான் அவர்கள் கொண்டிருக்கின்றார்கள் எனவே எமது வன்னியின் வனவளம் அழிக்கப்படுவது அல்ல எமது நோக்கம் ஆனால் வனவளத்தை பாதுகாப்பது என்று சொல்லிக் கொண்டு எமது மக்களில் வாழ்வியலை உருக்குலைத்து அவர்கள் பாவித்த இடங்களை கபளீகரம் செய்து மக்களின் அபிவிருத்திகளுக்கு இடையூறு செய்து கொண்டு இரகசியமாக எமது வனவளத்தை அழிக்கும் நிகழ்வுகளை வனவளப்பிரிவு செய்து கொண்டிருக்கிறது யுத்தகாலத்தில் விடுதலைப்புலிகள் வன்னியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலத்தில் தேக்கம் காடுகள் பெருமளவில் உருவாக்கப்பட்டிருந்தது என்பது வெளிப்படையாக அனைவரும் அறிந்த உண்மை 2009களின் பின் அந்த தேக்கம் காடுகள் அனைத்து அழித்து நிர்மூலம் ஆக்கப்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை அதற்கு சாட்சிகளாக முல்லைத்தீவு மாங்குளம் ஒட்டு சுட்டான் வீதிகளில் சென்றால் காணக் கூடியதாக இருக்கும் எனவே வன வளத்தை பாதுகாப்பதாக கூறிக் கொண்டு வனவளத்தை அழித்துக் கொண்டிருக்கும் இந்த வனவளப்பிரின் செயற்பாடுகளை மக்கள் தொடர்ச்சியாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதுதான் என்னுடைய கருத்து பல தடவை இது தொடர்பாக மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டு இருந்த போதும் அதிகாரிகள் சரியான பதில் களை வழங்கவில்லை மேலும் வளவளப்பிரிவினர் வனத்திற்குள் உள்ள மரங்களை வெட்டி வேறு மாவட்டங்களுக்க கொண்டு செல்லும் நடடிக்கையில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது ஆனால் வன்னியின் வளவளத்தை பாதுகாப்பதாக பூச்சாண்டி வேலையை செய்து வருகிறதா இந்த வனவளப்ரிவு என்னும் சந்தேகம் பலமாக எழுகிறது
வெலி ஓயா பிரதேசங்களில் அதாவது கொக்கிளாய் பகுதிகளை அண்டிய பிரதேசங்களில் வீதியின் ஓரங்களில் உள்ள காடுகளை விட்டுவிட்டு உட்பகுதி காடுகளை அழித்த வரலாறுகள் நிறையவே உண்டு எனவே இவர்கள் இரட்டை நிலைப்பாட்டில் செயற்பட்டு வருகிறார்கள் என்பதுதான் வெளிப்படையான உண்மை தமிழர்களின் தேவை என்று வரும்பொழுது இவர்கள் சட்டத்தை கதைப்பதும் மற்றபடி வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் எமது பிரதேசங்களில் ஊடுருவும் பொழுது மௌனமாக இருப்பது மிகவும் கவலைக்குரியது எனவே இது சம்பந்தமாக வந்துள்ள புதிய அரசு சரியான தீர்வு ஒன்றை எடுக்க முயற்சிக்க வேண்டும் தவறும் பட்சத்தில் வன்னிப்பிரதேசம் இவர்களுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடும் காலம் உருவாகும் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் அவர்கள் கருத்த தெரிவித்தார்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -