மூன்றாம்தவணைப்பரீட்சை முடிந்தகையோடு மாணவருக்கு தேர்ச்சிஅறிக்கை கட்டாயம் வழங்கப்படவேண்டும்!


கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் மன்சூர் அறிவுறுத்தல்.
காரைதீவு நிருபர் சகா-
ரீட்சைகளை நேரகாலத்துடன் பூர்த்திசெய்து 3ஆம் தவணை விடுமுறைக்கு முன்பாக விடைத்தாள்களை மாணவர்களுக்கு விளக்கமளித்து அவர்களிடம் ஒப்படைக்கவேண்டும். அத்துடன் மாணவர் அடைவுமுன்னேற்ற அறிக்கையையும் ஒப்படைக்கவேண்டும் என கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் சகல வலயக்கல்விப்பணிப்பாளர்களையும் அதிபர்களையும் கேட்டுள்ளார்.

வரலாற்றில் முதற்தடவையாக கிழக்கு மாகாணத்தில் மூன்றாந்தவணைப்பரீட்சை வழமைக்குமாறாக பாடசாலை மட்டத்தில் நடைபெற்று வருகிறது.
ஜனாதிபதிதேர்தலையொட்டி இப்பரீட்சைகள் முன்கூட்டியே நடைபெறஆரம்பித்தமை குறிப்பிடத்தக்குத.

அவர் மேலும் கூறுகையில்:
இம்முறை பொதுவானதொரு காலஅட்டவணை மாகாணத்திற்கோ வலயத்திற்கோ இருக்கப்போவதில்லை. ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அந்தந்தந்த பாடசாலை தமக்கேற்றால்போல் காலஅட்டவணையைத் தயாரித்து பரீட்சையை நடாத்த ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
அதற்கான அறிவுறுத்தல்களை 17 கல்விவலயங்களின் வலயக்கல்விப்பணிப்பாளர்களுக்கும் அவர்களுடாக சகல அதிபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் அதாவது விடுமுறைக்காக மாணவர்கள் வீடுசெல்லும் போது விடைத்தாள்கள்மற்றும் மாணவர் முன்னேற்ற அறிக்கை அவர்கள் கையிலிருக்கவேண்டும்.

வழமையாக இப்பரீட்சைஒரு குறிப்பிட்ட ஒரு குழுவினரால் அல்லது அதிபர்சங்கம் என்ற போர்வையில் ஒருசில வளவாளர்களை மட்டும்கொண்டு வினாப்பத்திரத்தைத்தயாரித்து குறித்த காலஅட்டவணையின்படி பல புகார்களுக்கு மத்தியில் நடைபெற்றுவந்தது.

பரீட்சைமுடிந்ததும் ஏகப்பட்ட முறைப்பாடுகள் வந்துசேரும். வினாத்தாளில் குழறுபடி பிழைகள் கற்பித்த அலகுக்கு வெளியே வினாக்கள் தெரிவானமை காலஅட்டவணையொன்று கூற அதற்கு முரணாக அடிக்கடி வேறுவேறு நேரமாற்றம் வினாத்தாள் அச்சடித்தலில் பணமோசடி என்று பலவிதமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறும்.

எனவேதான் கற்பித்த ஆசிரியர்கள் மேலும் தமது வாண்மைவிருத்தியை மேம்படுத்தவேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு ஆசிரியரும் தாம் முடித்த அலகிற்கேற்ப அந்தப்பரப்பிற்குள் வினாப்பத்திரத்தை தயாரிக்கவேண்;டும். அந்தப்பாடசாலை விரும்பிய காலஅட்டவணைக்கேற்ப பரீட்சையை நடாத்தவேண்டும். என கேட்டிருந்தோம்.
மறுபக்கம் ஆசிரியர்கள் தமது பாடப்பரப்பில் கூடுதல் பாண்டியத்தியம் உள்ளவராக மேம்படவைத்தலும் நோக்கமாகவுள்ளது. கிழக்கின் கல்வித்தரத்தை உயர்த்தும் உபாயத்தில் இதுவொரு மூலோபாயமாகும் என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -